Jan 27, 2024, 1:01 PM IST
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ள நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக முத்துக்குமாரசுவமி - வள்ளி தெய்வயானை சமேதராக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து பழனி வாழ் மக்கள் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக நிலா சோறு வைத்து கும்மி அடித்து முருகனுக்கு வழிபாடு செய்தனர்.
தைப்பூசம் நிறைவு விழாவான இன்று அப்பகுதி மக்கள் பொங்கல், மாவிளக்கு வைத்து. சிறியவர் முதல் பெரியவர்கள் அனைவரும் கும்மி அடித்து முருகனை வழிபாடு செய்தனர்.