Jan 26, 2024, 8:40 AM IST
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மலை அடிவாரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக முத்துக்குமாரசுவமி- வள்ளி தெய்வயானை சமேதராக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 28 ம் தேதி இரவு தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத்திருவிழா நிறைவடைகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.