தமிழ் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது.

தமிழ் கடவுளான முருகனின் பெருமையை உலகில் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் (ஆக.24), நாளையும் (ஆக.25) நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதைத் தொடர்ந்து, மாநாடு நடைபெறும் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் 100 அடி கம்பத்தில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றி வைத்தார். காலை 9 மணிக்கு மாநாட்டு கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!