தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்

தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்

Published : Nov 25, 2023, 10:29 AM IST

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி துவங்கப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை (26ம் தேதி) நடைபெறுகிறது. நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக 4 மணியளவில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

மகா தீபம் ஏற்றப்படும் பஞ்ச லோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 - 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் போது பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தீப கொப்பரையை சுமந்து சென்றனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more