பரிசலில் ஆடி அசைந்து மறுகரை வந்த பண்ணாரி மாரியம்மன்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்து வரவேற்பு

Mar 15, 2024, 8:08 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரியில்  பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். குண்டம் திருவிழாவையொட்டி, சப்பரத்தில் எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் சப்பரம், கடந்த 13ம் தேதி முதல் சிக்கரசம்பாளையம், புதூர், அக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம் வழியாக இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. 

4வது நாளான இன்று  இக்கரைத்தத்தப்பள்ளியில் இருந்து பண்ணாரி அம்மனை அக்கிராம மக்கள் ஆற்றின் கரையில் நின்று,  பரிசல் மூலம் வழி அனுப்பி வைத்தனர். அப்போது பரிசலில் பண்ணாரி அம்மன் பவானி ஆற்றை கடந்து, மூன்று முறை தண்ணீரில் சுழன்று வட்டமடித்து, அக்கரைதத்தப்பள்ளி கிராமத்தை வந்தடைந்தது. அப்போது மறுகரையில் நின்ற ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளத்துடன் வரவேற்றனர்.