Jan 21, 2024, 5:59 PM IST
ராமர் வனவாசம் முடித்து திரும்பியபோது, அயோத்தியில் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டது. தற்போது, கும்பாபிஷேகம் முடிந்ததும், மீண்டும் 'ராம் ஜோதி' ஏற்றி தீபாவளி கொண்டாடப்படும். கடந்த ஏழு ஆண்டுகளாக 'தீபோத்சவ்' நிகழ்ச்சியை நடத்தி வரும் யோகி அரசு, தனது தெய்வீகப் பொலிவுடன் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அயோத்தியை மீண்டும் ஜனவரி 22ஆம் தேதி அகல் விளக்குகளால் அலங்கரிக்கவுள்ளது.
பல்வேறு பிரபலங்களும் நாளை நடைபெறும் மாபெரும் விழாவில் பங்கேற்க இப்பொது அயோத்திக்கு புறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அயோத்தியில் கடைவீதியில் மக்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கைவினை பொருட்கள் முதல் பல்வேறு வகையான பொருட்களை மக்கள் மகிழ்ச்சியோடு கடைவீதிகளில் வாங்கி செல்கின்றனர்.
அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கொண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குழுமி ராமரை வழிபடவுள்ளனர். பக்தர்கள் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.