November 22 - 2022 : நாளைய ராசிபலன்!

November 22 - 2022 : நாளைய ராசிபலன்!

Published : Nov 21, 2022, 06:52 PM IST

Horoscope Today- Indriya Rasipalan November 22nd 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (22/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்:
இன்று குடும்ப உறுப்பினர்களிடையே நல்உறவு மேம்படும். முன்பின் தெரியாத நபருடன் பேசுகையில் கவனம் அவசிம். சிறிய கவனக்குறைவு நீங்கள் ஏமாற்ற வழிவகுக்கும். வணிக நடவடிக்கைகளில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:
நல்ல பேச்சுவார்த்தை மூலம் இனிமை காண வேண்டிய நாள். உங்கள் அதிகார தோரனையால் சிலர் பாதிக்கப்படலாம். வீட்டிற்கு முக்கிய நபரின் வருகை ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுக்கும். இன்று உங்கள் தடைபட்ட பணத்தை வசூலிப்பதிலும் நிதி நிலையை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:
இன்று பணம் தொடர்பான சில புதிய கொள்கைகளை திட்டமிடுவீர்கள். குடும்ப தேவைகளுக்கு செலவு ஏற்படும். வீட்டில் உள்ள ஒருவரின் உடல்நிலை குறித்து சற்று கவலை இருக்கும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்பட இருப்பிடத்தில் சில மாற்றம் தேவை.

கடகம்:
முதலீடு தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். வருமானத்திற்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும். அதிக சுயநலம் உங்கள் உறவை சீர்குலைக்கும். ஒரு முக்கிய நபரின் பங்களிப்பு உங்களின் வணிகத்தில் சில புதிய வெற்றிகளைத் தரக்கூடும்.

சிம்மம்:
இன்று நீங்கள் முன்பின் தெரியாத நபர்களை சந்திப்பீர்கள், அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சொத்துக்களை விற்கும் திட்டம் இருந்தால் அதில் கவனம் செலுத்துங்கள். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் வரலாம். உடல் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி:
உங்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் இருப்பீர்கள்.இன்று கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிடில் உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். வணிக நடவடிக்கைகளில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

துலாம்:
சமூகம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் நேரம் விரயம் ஆகும். வீட்டின் பெரியவர்களின் பாசமும், ஆசியும் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஒரு கட்டத்தில் உங்கள் இயல்பில் எரிச்சலையும் விரக்தியையும் உணர்வீர்கள். சில காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. வீட்டுச் சூழலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியம்.

விருச்சிகம்:
உங்கள் வழக்கத்தில் சில மாற்றங்களைத் கொண்டு வருவீர்கள். பரம்பரைச் சொத்து சம்பந்தமான சர்ச்சைகள் அதிகரிக்கலாம். எனவே இன்று அது தொடர்பான செயல்களை தவிர்ப்பது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களைச் செய்யும்போது கவனமாகச் சிந்தியுங்கள். உங்கள் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள்.

தனுசு:
இன்று திட்டமிட்ட வேலைகள் முடிவடையும். சில நேரங்களில் உங்கள் வேலையில் இடையூறுகள் ஏற்படுவதால், சில நேரம் விரயமாகும். நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். இப்போதைக்கு உங்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது; எந்த விதமான வியாபார நடவடிக்கைகளையும் பற்றி கவலைப்பட தேவையில்லை.

மகரம்:
ஆன்மிக நிகழ்ச்சிகள் மன அமைதியைத் தரும். சொத்து வாங்குவது அல்லது விற்பது தொடர்பான திட்டங்கள் இருக்கும். எந்த வகையான காகித வேலைகளையும் செய்யும்போது கூடுதல் கவனமாக இருக்கவும். ஒரு சிறிய தவறு உங்களுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். பணம் தொடர்பான விஷயங்கள் இப்போது கொஞ்சம் மந்தமாக இருக்கும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்:
தெய்வீக சக்தியின் ஆசீர்வாதம் மற்றும் அருள் பெருவீர்கள். எல்லா வேலைகளும் சரியாக முடிவடையும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருடனான உறவில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் தரும் பணிகளில் தொய்வு ஏற்படலாம். வணிக நடவடிக்கைகளில் முழு கவனம் மிகவும் முக்கியமானது.

மீனம்:
இன்று நீங்கள் ஒவ்வொரு வேலையையும் முடிக்க முயற்சிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களும் உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பார்கள். வீட்டில் ஒரு பண்டிகை சூழ்நிலை இருக்கும். உங்களின் கண்ணோட்டம் வேலைத் துறையில் பல விஷயங்களைத் தீர்க்கும். கணவன்-மனைவி இடையே சில கருத்து வேறுபாடுகள் வரலாம்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more