script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

மகா சிவராத்திரி; திருச்சி காளி கோவிலில் அகோரிகள் நடத்திய சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Mar 9, 2024, 9:55 AM IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்தக் கோவிலை காசியில் அகோரி பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் என்பவர் நிர்வகித்து பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் உடல் முழுவதும் திருநீறு பூசி கொண்டு ஜெய் அகோர காளி மற்றும் ஜெய் அஷ்ட காலபைரவர் முன் அமைக்கப்பட்ட யாககுண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

யாகத்தின் போது நவதானியங்கள், பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் சக அகோரிகள் மேளம் இசைத்தும், சங்கொலி எழுப்பியும் ஹர ஹர மஹாதேவ் என முழங்கி மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் பிற மாவட்டங்கள், மாநிலத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.