Sep 4, 2019, 4:38 PM IST
பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூர் மாவட்டத்தியில் குமரன் சாலையில் மணிமாறன் என்பவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையின் வாசலில் தனது இரு சக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு கடையைத் திறக்கச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியே செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் ஒருவர் சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை எந்த பயமுமின்றி சாதாரணமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதனடுத்து மணிமாறன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் மேற்க்கண்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.