Oct 13, 2022, 12:45 PM IST
அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் இருந்து பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழில்பேட்டை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொது மக்கள் தொழில்பேட்டைக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர் விசாரணையில் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும் இவர் சிங்கப்பூருக்கு செல்வதற்காக பரிசோதனை முடிந்து விசாவிற்காக காத்திருந்தது தெரியவந்தது.