சொல்லி சொல்லி வெட்டும் கும்பல்.. பொண்டாட்டி ஓடியதால் விபரீதம்.! பதறவைக்கும் வீடியோ

சொல்லி சொல்லி வெட்டும் கும்பல்.. பொண்டாட்டி ஓடியதால் விபரீதம்.! பதறவைக்கும் வீடியோ

Published : Aug 08, 2019, 04:00 PM IST

திருச்சியில் நடுரோட்டில் 5 பேர் கொண்ட கும்பல் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் படு பயங்கரமான தாக்கியுள்ள காட்சி தற்ப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவானைக்கோவில் பாரதி தெருவில் நடந்து செல்லும் பாதையில் 5 பேர் கொண்ட கும்பல் மணிகண்டன் என்கிற வாலிபரை ஓட ஓட துரத்தி இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் படு பயங்கரமாக தாக்கி உள்ளனர்.

 
இதனால் உயிருக்கு பயந்து அருகில் இருந்த அடகுக் கடைக்குள் மணிகண்டன் ஓடியுள்ளார். ஆனாலும் கடையில் இருந்து வெளியே இழுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் தப்பியோடிய நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.  

மேலும் காதல் தகராறில் இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வெட்டுபட்டவர் திருச்சி மாவட்டதியில் உள்ள திருவானைக்கோயில் திம்மராயர் சமுத்திரம் பகுதியில் வசிக்கும் கிட்டப்பா மகன் மணிகண்டன் என்றும் இவர் கொத்தனார் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. ஆனால்  கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி வேறொரு நபருடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 10 -ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மணிகண்டன் காதலித்தாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமியின் சகோதர் சிவா மணிகண்டனை கண்டித்துள்ளனர். ஆனால் அதன் பிறகும் சிறுமியை மணிகண்டன் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிறுமியுடன் மணிகண்டன் பேசிக்கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் சகோதர்கள் மணிகண்டனை தாக்கியுள்ளனர்.என்று இதனால் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடைபெற்றதாக விசாரணையில் தெரிகிறது.

பணத்தை கொடுங்க.. டபுளாக தாரேன்..தூத்துக்குடியில் கோடிக்கணக்கில் சுருட்டிய போலி முள்படுக்கை சாமியார்!
02:45 ஹைதராபாத்தில் வேறொரு பெண்ணுடன் உல்லாசம்; பிஆர்எஸ் தலைவரை மடக்கி பிடித்த மனைவி
26:52Watch | ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்ட காவல்துறை? / Rajaram Rtd ACP Interview
00:34Arrest : பட்டாகத்தியோடு பர்த்டே கொண்டாட்டம்.! நெருப்பு பறக்க காரில் ரேஸ்- ரவுடிக்கு மாவு கட்டு போட்ட போலீஸ்
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Seetharaman (Retired police) Interview | தென்தமிழகத்தில் சாதிய கொலைகள் தொடர்கதை ஆவது ஏன்?
Explainer | ஜெயக்குமார் மரணத்தில் காவல்துறைக்கு இருக்கும் சவால்கள் | Rajaram (Rtd ACP) Interview
02:17DMK : திண்டுக்கல்.. வெட்டி கொலை செய்யப்பட்ட தி.மு.க பிரமுகர்.. முன் விரோதமா? போலீசார் தீவிர விசாரணை!
14:58Coimbatore : கோவை.. இளைஞர்களை குறி வைத்து கஞ்சா & உயர் ரக போதை பொருட்கள் விற்பனை - அதிரடியாக ஐவர் கைது! Video!