script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

Watch : புதுவையில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி நிர்வாண புகைப்படங்களை பெற்று மிரட்டல்! - இளைஞர் கைது!

Apr 13, 2023, 12:39 PM IST

Fittness frank இன்ஸ்டாகிராம் செயலியில், குறைந்த நாட்களில் உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? நீங்கள் அழகாக வேண்டுமா? என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப் பட்டிருந்தது.

மேலும் பெண் ஒருவர் பேசுவது போன்று ஆடியோ மூலம் பயிற்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பரத்தை நம்பிய புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பேசிய பெண், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகிய கட்டுடலாக உங்கள் உடம்பு மாறும். உங்களின் ஆடை யில்லாத புகைப்படங்களை அனுப்பினால் அதற்கேற்ப உடல் பயிற்சிகளை பரிந்துரை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

உடல்பயிற்சி வல்லுநர் என நம்பிய சில பெண்கள் தங்கள் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. பதிலுக்கு சில உடற்பயிற்சி குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். இதனால் பலரும் நம்பி தங்களின் நிர்வாண படத்தை அனுப்பி உடற்பயிற்சி ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், மற்றொரு இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து உங்களின் அந்தரங்க புகைப்படம் தன்னிடம் உள்ளது என்றும், இந்த எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என சில பெண்களை ஒரு நபர் மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்கள் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிந்து மேற்கொண்ட விசாரணையில், உடல்பயிற்சி வல்லுநர் என்றும், பெண் போல பேசி பெண்களின் நிர்வாண போட்டோக்களை பெற்று, மிரட்டியது ஒரு ஆண் என தெரியவந்தது. அவர், முத்தியால்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான திவாகர் (22) இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு பெண்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.



சமூகவலைத்தளங்களில், யாரும் தங்கள் அந்தரங்க புகைப்படத்தையோ பணத்தையோ மற்ற ஏதாவது முக்கியமான ஆவணங்களையோ அனுப்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.