Aug 3, 2019, 12:58 PM IST
தமிழ்நாட்டில் ரவுடிகள் தனது பிறந்த நாளை பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு சென்னையை தொடர்ந்து சேலம், கரூர் போன்ற இடங்களில் அவ்வப்போது நடைப்பெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட ரௌடியைகளை காவல்துறையினர் கைது செய்து தண்டிக்கவும் செய்கின்றனர்.
அதேபோல் ஒரு இளைஞர் துப்பாக்கியில் கேக்கை சுட்டு தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத் மாவட்டத்தில் ஒரு இளைஞர் துப்பாக்கியில் கேக்கை சுட்டு தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி ஆரவாரம் செய்து உள்ளார். இந்த வீடியோ கடந்த புதன்கிழமை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது இதன் சமந்தமாக பல தரப்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் பாக்பத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்ப்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.