Sep 30, 2019, 6:33 PM IST
சென்னை முகப்பேர் மேற்கு 7-வது பிளாக் கோபி (78), இவரது மகள் ஜோதி (28), இவர் தனது கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு ஜோதியின் வீட்டிற்கு வந்த முத்துபாண்டி என்பவர் ஜோதியின் அண்ணன் எங்கே என்று கேட்டு அவரது தந்தை கோபியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜோதி நேற்று அதிகாலை நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அங்கிருந்த போலீசார் ஜோதி புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ஜோதி வீட்டிற்கு சென்று மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அனைத்து ஜோதியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நொளம்பூர் போலீசார் முத்துப்பாண்டியை என்பவரை பிடித்து விசாரணை கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜோதியிடம் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் திரு.நாகராஜ் அவர்கள் தலைமையில் வாக்கு மூலம் பெற்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்