தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கி பொண்ணு பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
 

இயக்குநர் வம்சி இயக்கத்தில் குடும்பக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சதீஷ், பிரபு, ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, சங்கீதா, நந்தினி, விடிவி கணேஷ், ஸ்ரீமன், சுமன், கணேஷ் வெங்கட்ராமன் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். பொங்கலுக்கு வந்தப் படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வரவேற்பு பெற்று வசூல் அள்ளியது.

நாங்கெல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க... அஸீமை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த வனிதா - வைரலாகும் போட்டோஸ்

இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வாரிசு வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.193.94 கோடியும், வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ.275.69 கோடியும் வசூல் அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் ரூ.300 கோடி வசூல் கொடுத்த படங்களின் பட்டியலில் வாரிசு படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் வசூல் வேட்டை... நான்கு நாட்களில் ரூ.400 கோடி கலெக்‌ஷன் அள்ளிய ஷாருக்கானின் பதான்

வாரிசு படம் மட்டுமின்றி படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு பெற்றது. ரஞ்சிதமே என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி வைரலாகி வருகிறது. அதோடு ரீல்ஸ்க்கும் ரஞ்சிதமே பாடல் தான் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான ஜிமிக்கி பொண்ணு என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக டுவிட்டரில் ஜிமிக்கி பொண்ணு (#JimikkiPonnu) என்ற பாடலின் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

என்ன சிம்ரன் இதெல்லாம்... நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்த சிம்ரன் - வைரலாகும் போட்டோ

13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !
01:13கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
Read more