Sep 22, 2022, 2:00 PM IST
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பிரபல நாவலான பொன்னியின் செல்வன் படம் பல தலைமுறைகள் கடந்து தற்போது திரைக்கு வர தயாராகிவிட்டது. மணிரத்தினத்தின் கனவு படமான இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் தமிழில் உள்ள முன்னணி நாயகர்கள் பலரும் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் சிலநாட்கள் மட்டுமே இருப்பதால் படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு... தனுஷ் உட்பட படக்குழுவினர் இணைந்து வெளியிட்ட கேப்டன் மில்லர் சூப்பர் அப்டேட்
அந்த வகையில் சோழ இளவரசனால் கொல்லப்பட்ட பாண்டிய மன்னனின் மரணத்திற்கு பழி தீர்ப்பதற்காக சோழ நாட்டிற்குள் புகும் பாண்டிய வீரர்கள் குறித்த புரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் நடிகர் கிஷோர், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம் உடன் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.