Saani Kaayidham: செல்வராகவனின் புதிய அவதாரத்தில், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
முதன் முதலில் நடிகராகும் செல்வராகவன்:
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும், செல்வராகவன் முதன் முதலில் ஹீரோவாக ஜொலிக்கும் திரைப்படம் சாணிக் காயிதம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
செல்வராகவன் திரைப்படங்கள்:
தமிழ் சினிமாவின் இன்றுவரை ஆகச் சிறந்த படைப்புகளாக செல்வராகவன் இயக்கத்தில் உருவான, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,என் ஜி கே உள்ளிட்ட படங்கள் இன்று வரை திகழ்கின்றனர். இந்த நிலையில் இயக்கத்தில் மட்டும், கவனம் செலுத்தி வந்த செல்வராகவன் இப்பொழுது நடிப்பிலும் களம் இறங்கியுள்ளார்.இந்த படத்தில், செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ்:
கீர்த்தி சுரேஷ், குறைந்த கால கட்டத்திலேயே கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார். இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சாணிக் காயிதம்:
மக்களிடையே நல்ல வரேவேற்பை பெற்று தந்த, 'ராக்கி' பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
80களில் நடப்பது போன்ற கதைக்களம்:
ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வரும்.இந்த திரைப்படம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவனின் வழிப்பறிக் கொள்ளை சம்பந்தப்பட்ட பல காட்சிகள் மற்றும் திரைக்கதைகள் பதிவாகி இருக்கிறது.
சாணி காயிதம் பட டீசர்:
கடந்த வருடம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...