Kodthe Lyrical : சமந்தாவை தொடர்ந்து மாஸ் குத்து குத்தும் தமன்னா..செம ட்ரெண்டாகும் Kodthe Lyrical

Kanmani P   | Asianet News
Published : Jan 15, 2022, 01:31 PM ISTUpdated : Jan 15, 2022, 01:32 PM IST
Kodthe Lyrical : சமந்தாவை தொடர்ந்து மாஸ் குத்து குத்தும் தமன்னா..செம ட்ரெண்டாகும் Kodthe Lyrical

சுருக்கம்

Kodthe Lyrical : தமன்னா சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ள Kodthe Lyrical பாடல் Ghani படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்ற அழகில், தமிழ் ரசிகர்களை சுமார் 15 வருடங்களாக கவர்ந்திழுத்து வருபவர் நடிகை தமன்னா. தமிழ் - தெலுங்கு ஆகிய இரு படங்களிலுமே அதிகம் ஆர்வம் காட்டி வந்த இவர், இரு மொழியை சேர்ந்த முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார். குறிப்பாக பாகுபலி முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இவர், நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த பின்னர் உலக அளவில் பிரபலமானார்.

எனவே சமீப காலமாக தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளையே அதிகம் தேர்வு செய்கிறார். தற்போது இவரது கை வசம் ஒரு தமிழ் படம் கூட இல்லை என்றாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்கள் அம்மணிக்கு வரிசை கட்டி நிற்கிறது.

அந்தவகையில் தற்போது தமன்னா சிறப்பு பாடல் ஒன்றுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. வருண் தேஜை ஹீரோவாக வைத்து கிரண் கொரபாட்டி 'கனி' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். படத்தை அல்லு பாபி - சித்து முத்தா தயாரித்துள்ளனர். வருண் தேஜ் ஜோடியாக சாய் மஞ்ச்ரேக்கர் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளார். 

இந்த படத்தில் நட்சத்திர நாயகி தமன்னா சிறப்பு பாடலில் நடிக்கிறார் என்பது தெரிந்ததே. ராமஜோய்யா சாஸ்திரி இசையமைத்த இந்தப் பாடலை ஹரிகா நாராயண் பாடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிவடைந்து வால்பேப்பர்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் Kodthe Lyrical வீடியோ வெளியாகி மாஸ் ட்ரெண்டாகி வருகிறார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழ் படத்தின் காப்பியா? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்
ஊதித் தள்ள நான் ஒன்னும் மண் இல்ல... மலை..! கவனம் ஈர்க்கும் காந்தா டிரெய்லர் இதோ