விதி விளையாடும் ஆட்டம் : வாத்தியார் மகன் திக்குவாய் சபாபதி : ட்ரைலர் உள்ளே !!

Kanmani P   | Asianet News
Published : Nov 10, 2021, 07:00 PM ISTUpdated : Nov 10, 2021, 07:07 PM IST
விதி விளையாடும் ஆட்டம் : வாத்தியார் மகன் திக்குவாய் சபாபதி : ட்ரைலர் உள்ளே !!

சுருக்கம்

திக்குவாய் இளைஞனின் வாழ்வில் விதி விளையாடும் ஆட்டமும், அதனால் சபாபதி சந்திக்கும் பிரச்சனையும்  குறித்த கதை; சந்தானத்தின் சபாபதி ட்ரைலர் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளி திரையில் கலக்கி வரும் சந்தானம துணை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். நக்கலுக்கு பெயர் போன சந்தானம் விஜய், உதயநிதி, ஆர்யா, அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களின் தோழனாக நடித்துள்ள காட்சிகள் மனதில் பதிந்தவையாகவே இருக்கும். பின்னர் கமெடியனிலிருந்து நாயனாக தன்னை திசை திருப்பிய சந்தானம் காமெடி சார்ந்த கதைகளையே தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் முதல் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா வரை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவரது நடிப்பில் வந்த படங்களின் வெற்றியில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பினும் தனது பாதையை மாற்றாத நடிகர் சந்தானம் தற்போது 'சபாபதி' என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீனிவாச ராவ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரில் வாத்தியாரின் மகனான சபாபதிக்கு திக்குவாய் இருப்பதால் அவருக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. இதனால் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் அந்த இளைஞன் அவமானப்படுவது போன்ற காட்சி உள்ளது. பின்னர் விதி பேசுவது போன்றும் வில்லன் தவறவிட்ட பணம், பெட்டியுடன் சபாபதி கையில் கிடைப்பதால் சபாபதியின் வாழ்க்கையே தலைகீழாக மாறியுள்ளது போன்ற சித்தரிப்புகள் இடம் பெற்றுள்ளது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழ் படத்தின் காப்பியா? ரசிகர்களை கன்பியூஸ் ஆக்கிய தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரெய்லர்
ஊதித் தள்ள நான் ஒன்னும் மண் இல்ல... மலை..! கவனம் ஈர்க்கும் காந்தா டிரெய்லர் இதோ