அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் Prevue வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக நான்கு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் அட்லீ. இவர் தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.
பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியாமணி, சானியா அய்யப்பன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் ஷாருக்கானும், அவரது மனைவி கெளரி கானும் இணைந்து தயாரித்து உள்ளனர். ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஐட்டம் டான்ஸ் ஆட... ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி சம்பளம் - லெஜண்ட் பட நடிகைக்கு இவ்ளோ மவுசா!
ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் ப்ரீ ரிலீஸ் பிசினஸிலும் பல்வேறூ சாதனைகளை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் மற்றும் இசை உரிமைகள் மட்டும் ரூ.250 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அப்படத்தின் அப்டேட்டுகள் தற்போது ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று ஜவான் திரைப்படத்தின் Prevue வெளியிடப்பட்டு உள்ளது. ஜவான் திரைப்படத்தின் Prevue பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸ் ஆக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். சிலரோ இது அட்லீயின் சம்பவம் என கமெண்ட் செய்து வருகின்றனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த Prevue யூடியூப்பில் செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சாமி முதல் மைனா வரை... சின்னத்திரையில் இன்றைய ஸ்பெஷல் மூவீஸ் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ