கும்மிடிப்பூண்டி ரயில்நிலையம ஒட்டி உள்ள பயணிகளுக்கான பயண சீட்டு மற்றும் முன்பதிவு மையத்தை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி ரயில்நிலையம ஒட்டி உள்ள பயணிகளுக்கான பயண சீட்டு மற்றும் முன்பதிவு மையத்தை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கம், ரெட்டம்பேடு, தேர்வழி, உள்ளிட்ட 10 மேற்பட்ட கிராம புற மக்களும், கடை ஒட்டி உள்ள காட்டுக் கொள்ளை தெரு பகுதியில் அதிகப்படியான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் கடைகளுக்கும், ரயில் நிலையத்திற்கும் சென்று வருகிறார்கள்.
இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதும், அவ்வழியே ரயில் நிலையத்திற்கு போகும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்கின்றனர். மேலும் டாஸ்மாக் கடையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் குடிபோதையில் தகராறு ஏற்படுவதுண்டு. தொடர்ந்து மேற்கண்ட கடையை அகற்றக்கோரி எற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடையை அகற்றக்கோரி அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வத கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் கந்தசாமி, கிராம நிர்வாக அலுவலர் பாக்கிய ஷர்மா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் மதுபானக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற இன்ஸ்பெக்டர், தற்காலிகமாக டாஸ்மாக் மதுபானக்கடையை மூட உத்தரவிட்டார். இனிமேல் திறக்க வேண்டும் என்றால் வருவாய் துறை, காவல்துறை, பொது மக்கள் பேச்சுவார்த்தை பின்பே முடிவெடுக்கும் என்று கூறினார். பின்பு கடை மூடப்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.