பெற்ற தாயை கொலை செய்தது ஏன்? கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம்...!

By vinoth kumar  |  First Published Dec 26, 2018, 10:10 AM IST

பேஸ்புக் காதலை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாயார் உயிரோடு இருந்தாம் நாம் சேர முடியாது என காதலன் சொன்னதால் தாயை கொலை செய்தேன் என கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 


பேஸ்புக் காதலை கைவிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்த தாயார் உயிரோடு இருந்தாம் நாம் சேர முடியாது என காதலன் சொன்னதால் தாயை கொலை செய்தேன் என கல்லூரி மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (வயது 50). இவர்களது 2-வது மகள் தேவிபிரியா (19). ஆடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.  தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்துள்ளார். ஆகையால் காதலுடன் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். ஆனால் வீட்டை விட்டு செல்லவும் தாய் எதிர்ப்பு தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் ஆத்திரமடைந்த தேவிபிரியா தனது காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து பானுமதியின் வாய் மற்றும் கைகளை பிடித்து கொள்ள, தேவிபிரியா புதிதாக  வாங்கி வைத்திருந்த கத்தியால் மார்பு, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் பானுமதி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தேவிபிரியா மற்றும், இரு இளைஞர்களை பிடித்து திருவள்ளூர் தாலுக்கா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

  

இதனையடுத்து தேவிபிரியாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பேஸ்புக் மூலம் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த சுரேஷ்(18)  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இவர், ஆந்திர மாநிலம் தடா அருகே உள்ள தனியார் தொழிற்சாலை  பணிபுரிந்து வருகிறார்.  

இந்த பேஸ்புக் காதலுக்கு தனது தாய் பானுமதி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால், தனது பேஸ்புக் காதலன் சுரேஷை தொடர்புகொண்டு, தனது தாய்  காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தன்னை வீட்டுக்கு வந்து அழைத்துச் செல்லுமாறு, கடந்த 10 நாட்களுக்கு முன் செல்போனில் கூறினேன்.  இதையடுத்து, சுரேஷ் தனது நண்பர்கள் இருவரை அனுப்புவதாகவும், அப்போது, தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அவர்களுடன் வந்துவிடுமாறும் கூறினார். இதற்காக நான் கத்தியையும் வாங்கி தயாராக வீட்டில் வைத்திருந்தேன். காதலன் சுரேஷ் கூறியபடி, நேற்று முன்தினம் அவர் அனுப்பிய நபர்களுடன் சேர்ந்து கத்தியால் தனது தாயை குத்தி கொலை செய்துவிட்டு வெளியே வரும்போது, கிராம மக்கள் எங்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என கூறியுள்ளார். 

இதையடுத்து, ஆந்திர மாநிலம் தடா பகுதிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு தேவிபிரியாவின் காதலனை நள்ளிரவில் கைது செய்து திருவள்ளூர்  அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த  வாக்குமூலத்தில், ‘தனது பேஸ்புக் காதலி தேவிபிரியாவை அழைத்துவர, தனது நண்பர்கள் உதவியை நாடினேன். தேவிபிரியாவை அழைத்துவர காக்களூரில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். தேவிபிரியாவுடன் சேர்ந்து அவர்கள் இருவரும் ஏற்கனவே திட்டமிட்டபடி, பானுமதியை கொலை செய்துவிட்டு வெளியே வரும்போது  மக்களிடம் சிக்கியுள்ளனர். இதில், தேவிபிரியா தன்னை காதலித்து வருவதையும், திட்டம் தீட்டியதையும் போலீசாரிடம் கூறியதால் நான் சிக்கினேன் என தெரிவித்துள்ளார். 

click me!