சென்னை புழல் அருகே லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் கிஷோர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் அருகே லாரி மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் கிஷோர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே பூபதி என்பவருடைய மகன் கிஷோர், தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கடப்பா-வில்லிவாக்கம் ரோடு சந்திப்பில், இருசக்கர வாகனத்தில் கிஷோர் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவில் திரும்பியபோது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதி, லாரியின் அடியில் மாட்டிக்கொண்ட கிஷோர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சிகள் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.