திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவரின் கால் துண்டான நிலையில் சாலையில் கிடந்துள்ளது. ஆனால் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரை காணாததால் தேடிக் கண்டுபிடித்துத் தரக்கோரிப் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த அத்திப்பட்டைச் சேர்ந்த சுதாகர் காக்களூர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் நேற்றுப் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊர்திரும்பிக் கொண்டிருந்தபோது பாண்டூரில் ஒரு கார் இவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சுதாகரின் கால் துண்டானது.
undefined
விபத்து நடந்த இடத்தில் இருசக்கர வாகனம், தலைக்கவசம் ஆகியன சாலையில் கிடந்தன. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரிடம் சுதாகர் உயிருடன் இருக்கிறாரா எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிய வேண்டும் என உறவினர்கள் கோரி்க்கை விடுத்தனர்.
இது தொடர்பாக திருவள்ளூர், சென்னை ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் விசாரித்தும் சுதாகர் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாததால், ஆளைத் தேடிக் கண்டுபிடித்துத் தரக் கோரிப் பாண்டூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.