ஷண்முகம் சொன்ன விஷயம்... ஒட்டுக்கேட்டு போட்டு கொடுத்த சனியன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Published : Oct 31, 2023, 03:32 PM IST
ஷண்முகம் சொன்ன விஷயம்... ஒட்டுக்கேட்டு போட்டு கொடுத்த சனியன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

சுருக்கம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் பற்றிய இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜோதிடரை ஷண்முகம் சந்தித்து பேசிய நிலையில் இன்று  நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் மார்க்கெட்டில் பாக்கியத்தை சந்தித்து விஷயத்தை சொல்ல முயற்சி செய்ய அவள் சனியன் தன்னுடன் இருப்பதால் அவனிடம் பணத்தை கொடுத்து ஒரு பொருளை மட்டும் வாங்கல, வாங்கிட்டு வா என்று அனுப்ப சனியனுக்கு இவர்கள் ஏதோ பேச போகிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. 

இதனை தொடர்ந்து சனியன் ஜோதிடரை சந்தித்து, அவர் அம்மன் கோவமா இருக்கா அதனால் வேஷம் கட்டி ஆட சொல்றாரு, அப்போ ரத்னாவுக்கும் வெங்கடேஷுக்கும் காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை நடத்தி முடித்திடலாம்னு சொல்றாரு என்று சொல்ல, அவளும் நல்ல விஷயம் தான், முதலில் ரத்னாவுக்கு கல்யாணத்தை முடித்திடலாம் என்று சொல்ல, இதை சனியன் ஒட்டு கேட்டு விடுகிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை அடுத்து சனியன் வீட்டிற்கு சென்று முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியிடம் விஷயத்தை சொல்ல, சௌந்தரபாண்டி இதே திருவிழாவில் வச்சி நீ அந்த ரத்னா கழுத்தில் தாலியை கட்டிவிடு என்று சொல்ல, முத்துபாண்டியும் அதற்கு தயாராகிறான். 

மறுபக்கம் வீட்டிற்கு வந்த ஷண்முகம் வேஷம் கட்டி ஆட போவதை சொல்ல அதை கேட்டு எல்லாரும் ஷாக் ஆகின்றனர். தங்கைகள் அண்ணனுக்காக நாமும் வேஷம் கட்டி ஆடலாம் என முடிவெடுக்கின்றனர். பிறகு என்ன வேஷம் போடணும்னு என ஷண்முகம் குறி கேட்க சிவன் வேஷம் போட சொல்லி உத்தரவு வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்த விறுவிறுப்பான காட்சிகளுடன் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... துணிவு முதல் போர் தொழில் வரை... தீபாவளி விருந்தாக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாக உள்ள புதுப்படங்களின் லிஸ்ட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!