
Sivabalan Move to Love Track : ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் அண்ணா சீரியல், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேற்றைய எபிசோடில் வீரா சிவபாலன் சௌந்தரபாண்டி ஆகியோர் மீது போலீஸ் புகார் கொடுத்த நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெற சொல்லி வீராவை பாரதி ரத்னா ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.
ஆனால், வீராவோ தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இதே போன்று வீரா கொடுத்த புகார் ரொம்பவே ஸ்டிராங்கா இருக்கு, அதனால், நீங்க கம்பி எண்ணுறதுக்கு வாய்ப்பிருக்கு என்று சௌந்திர பாண்டி வீட்டிற்கு வந்த வழக்கறிஞர் கூற, அதைக் கேட்டு சௌந்தர் பாண்டி அதிர்ச்சிஅடைகிறார். மேலும், அவராகவே இந்த கேஸை வாபஸ் வாங்க வேண்டும், இல்லையென்றால் இந்த வழக்கை நான் வாபஸ் வாங்க செய்வேன், தாலிய கழற்றி கொடுக்கிறேன் என்று சொல்ல வைத்து அதை வீடியோ எடுக்கணும் என்று சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி நீ போய் வீரா கிட்ட பேசி பேச வாபஸ் வாங்க வை என்று சிவபாலனிடம் சொல்கிறார். சிவபாலன் யோசிக்க அந்த சமயத்தில் இசக்கியம் பாக்கியாவும் நீ வீராவுடன் தான் வாழ வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு சிவபாலன் வீரா மனசை மாற்றி வீட்டிற்கு அழைத்து வருவேன் என்று பாக்கியத்திற்கு சத்தியம் செய்து கொடுக்கிறான்.
சிவபாலன் தன் பூஜை முடித்துக் கொண்டு வீட்டை விட்டு கிளம்ப சௌந்தரபாண்டி நீ எங்கடா போற அப்படின்னு கேட்க என் மனைவி வீராவை அழைத்து வரச் செல்கிறேன் என்று கூறுகிறான் அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ள ஜீ திரையில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலில் தொடர்ந்து பார்க்கவும்.
அடுத்த நாள் சிவபாலன் பூஜை எல்லாம் முடித்து பட்டையெல்லாம் போட்டுக்கொண்டு வெளியில் கிளம்ப பாக்கியம் எங்கடா கிளம்பிட்ட என்று கேட்க. நீதானே வீரா ஓட எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்ன. அதான் பூஜையுடன் ஆரம்பித்து லவ் பண்ண கிளம்பிட்டேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.