
Thangamayil argue with saravanan : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தனக்கு அரசு வேலை கிடைக்க அரசியின் திருமணத்திற்கு அப்பா சேர்த்து வைத்த ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து மாமனாரிடம் கொடுத்து அரசு வேலையும் செந்தில் வாங்கிவிட்டார். ஆனால், அப்போது நடந்த பஞ்சாயத்தில் அரசிக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டார் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ரூ.10 லட்சம் செலவாகிவிட்டது. அதனை நீங்கள் தான் கொடுக்க வேண்டும் என்று கூற செந்திலிடம் வங்கியில் போட சொல்லி கொடுத்த ரூ.10 லட்சம் பணத்தை கேட்டார். ஆனால், செந்தில் தான் அதனை மாமனாரிடம் கொடுத்துவிட்டாரே, பிறகு வேறு வழியில்லாமல் மீனா தான் அந்த பணத்தை அலுவலகத்தில் லோன் போட்டு கொடுத்தார்.
இந்த உண்மை பாண்டியனுக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிந்தது போன்று மீனாவின் அப்பாவிற்கு இப்போது தான் தெரிந்துள்ளது. இந்த நிலையில் தான் இனிமேலும் இதனை அப்படியே விடக் கூடாது என்று கருதிய பாண்டியன் மீனாவிற்கு அந்த பணத்தை கொடுக்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது வயல் நிலத்தை விற்க முடிவு செய்து சரவணனனிடம் ஏற்பாடுகள் செய்ய சொன்னார்.
அதோடு, கதிரும் டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதனால், அவனுக்கும் அதற்குரிய பணத்தை கொடுத்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார். இது தங்கமயிலுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்பாவின் சொத்து அனைத்து பிள்ளைகளுக்கும் சரி சமமாக பிரித்து கொடுக்கப்பட வேண்டும். ஆனால் செந்தில் மற்றும் கதிருக்கு மட்டும் பிரித்து கொடுப்பது நியாயமில்லை என்று கூறி சரவணனிடம் நியாயம் பேசுகிறார் தங்கமயில்.
அதற்கு சரவணன் ஹோட்டல் வேலை, படிப்பு, குழந்தை என்று நீ பேசியது எல்லாம் நியாயமா? சொன்னது எல்லாமே பொய் இதில் நியாயம் தர்மம் பற்றி பேசுற என்று கூறி அவருடன் வாக்குவாதம் செய்தார். மேலும் உன்னைப் பற்றிய உண்மையை இன்னும் என்னுடைய வீட்டில் நான் சொல்லவில்லை. அப்படி சொல்லிவிட்டேனா என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களால் தாங்க முடியாது. என்னை ஏமாற்றுகிறார்களா? என் மீது பாசம் இல்லையா என்றெல்லாம் சரவணன் கேட்க, தங்கமயில் பதிலளிக்க முடியாமல் வாயடைத்து நின்றார்.
அதன் பிறகு ஏதாவது பேசியிருந்தால் அவருக்கு அடிதான் விழுந்திருக்கும். அந்தளவிற்கு தங்கமயில் சரவணனிடம் பேசிவிட்டார். காலம் காலமாக தமிழ் சினிமாவில் சொத்து வைத்திருக்கும் பெற்றோர்களுக்கும், சரி பிள்ளைகளுக்கும் சரி இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.