
Naveen Escaped From Police Scene Missing : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இந்த வாரம் துர்காவின் திருமண சடங்குகள் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டு முகூர்த்த புடவையும் எடுக்கப்பட்டது. இதில் துர்கா நவீனை பார்க்க முடியாமல் தவித்த நிலையில் கார்த்திக் அங்கேயே நவீனை மறைத்து வைத்திருந்த உண்மையை வெளிப்படுத்தினார். மேலும் நவீனை பார்த்த சந்தோஷத்தில் துர்கா முகூர்த்த புடவை எடுக்க கடைக்கு சென்றார். அப்போது அவர் உடனே நவீனே கடைக்கு வர சொல்ல அவரும் வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டார். நவீன் இருப்பதை அறிந்து கொண்ட சந்திரகலா அவரை போலீசிடம் மாட்டிவிட முடிவெடுத்து போலீசுக்கு போன் போட்டார்.
அப்போது கார்த்திக் அவரை புடவைகள் வைக்கும் அட்ட பாக்ஸிற்குள் ஒளிய சொன்னார். அந்த பாக்ஸை தூக்கி செல்லும் போது போலீசார் அதனை பரிசோதனை செய்தார்கள். அதோடு நேற்றைய எபிசோடுகள் முடிவடைந்தது. இன்றைய எபிசோடும் அதிலிருந்து தொடங்கியது. ஆனால், நவீன் ஒளிந்திருந்த காட்சிகளும் இடம் பெறவில்லை, அவர் எப்படி அங்கிருந்து எஸ்கேப் ஆனார் என்பதற்கான காட்சிகளும் இடம் பெறவில்லை. அதன் பிறகு நவீன் துர்கா வீட்டில் இருப்பது போன்று காட்டப்பட்டது. இதில், நவீன் அப்பா அம்மாவாக நடிக்க வந்த கும்பல் பற்றி கார்த்திக்கிடம் கூறினார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க நவீன் துர்கா அறையில் இருப்பதை எப்படியோ சந்திரகலா கண்டுபிடித்துவிட்டார். அதற்கு முன்னதாக கார்த்திக் சொல்வதை கேட்டிருந்தால் சந்திரகலா மட்டுமின்றி வேறு யாராலயும் நவீன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், கார்த்திக் சொல்வதைத் தான் இங்கு யாரும் கேட்கவில்லை. இப்போது சந்திரகலா பார்த்த நிலையில் போலீசுக்கு தகவல் கொடுக்கிறரா அல்லது ரவுடிகளை வைத்து கிட்னாப் செய்கிறாரா என்பது பற்றி நாளைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.