6 பைனலிஸ்டுடன் அனல் பறக்கும் மோதல்... சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் பைனலில் டைட்டிலை தட்டிதூக்கப் போவது யார்?

Published : Dec 13, 2023, 04:03 PM IST
6 பைனலிஸ்டுடன் அனல் பறக்கும் மோதல்... சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் பைனலில் டைட்டிலை தட்டிதூக்கப் போவது யார்?

சுருக்கம்

குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. 

சரிகமப சீசன் 3 ( சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். 

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இவ்வாறாக மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ம் தேதி நேரடி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியினை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... 15 கிலோ உடல் எடையை குறைத்த ஏகே... விடாமுயற்சி பட வில்லன் வெளியிட்ட போட்டோவால் லீக்கான அஜித்தின் ஸ்லிம் லுக்

PREV
click me!

Recommended Stories

கணவருடன் சேர்ந்து வாழணும்; வீட்டு வாசலிலேயே தர்ணாவில் ஈடுபட்ட தங்கமயில்: பரபரப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!