பெண் போட்டியாளரிடம் ரிலேஷன் ஷிப்பில் இருக்கலாமா என கேட்ட விஷ்ணு..! யாரிடம் தெரியுமா? வைரல் வீடியோ!

By manimegalai a  |  First Published Dec 10, 2023, 12:36 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில்... விஷ்ணு மீது பெண் போட்டியாளர் ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டு, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. முதல் வாரமே அனன்யா ராவ் மக்களின் வாக்குகள் அடிப்படையில், வெளியேற்றப்பட்ட நிலையில்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலன் கருதி வெளியேறுவதாக அறிவித்தார்.

எனவே முதல் வாரமே இரண்டு எலிமினேஷன் நடந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், திடீரென பிக்பாஸ் ஐந்து போட்டியாளர்களை உள்ளே அனுப்பி மீண்டும் பிக்பாஸ் வீட்டை பரபரப்பாக மாற்றினார். இந்த வைட்டு கார்டு போட்டியாளர்களால்... தற்போது வரை பிக் பாஸ் வீடு பற்றி கொண்டு எரிந்து வருகிறது. இதை தொடர்ந்து எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல், ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளனர்.

Latest Videos

Leelavathi Death: திரையுலகில் மேலும் ஒரு சோகம்... பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்.!

தற்போது பைனலை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சி நகர்ந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பரபரப்பு.. சண்டை.. சர்ச்சைகள்.. என பிக் பாஸ் வீடு அலறி வருகிறது. மேலும் யார் எந்த நேரத்தில் எப்படி மாறுவார்கள் என்று யூகிக்க முடியாத அளவுக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது. அதேபோல் இதற்கு முன்பு நடந்த 6 சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்துவிட்டாலே யார் வெற்றியாளர்கள் என்பதை மக்கள் ஓரளவு கணித்து விடுவார்கள். ஆனால் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யார் டைட்டிலை வெல்வார்கள் என்பது தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

'சூது கவ்வும்' படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்தது இவரா? யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

இது ஒரு புறம் இருக்க விஷ்ணு குறித்து பெண் போட்டியாளரான அனன்யா ராவ் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.  இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீடு இரண்டு கேங்காக செயல்பட்டு வருகிறது. மாயா, பூர்ணிமா அனன்யா ராவ், விக்ரம், ரவீனா, ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது.. அனன்யா ராவ், விஷ்ணு தன்னிடம் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா என கேட்டதாகவும், அதற்கு தான் மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே பூர்ணிமா பக்கம் விஷ்ணு ஒரு ட்ராக் போட்ட நிலையில், திடீர் என அந்தர்பல்டி அடித்தார். இதை தொடர்ந்து அனன்யாவிடம் இப்படி பேசியுள்ளதால்... இதை விஷ்ணு ஒரு கேம் விளையாடுவதற்கான, தந்திரமாக பயன்படுத்தி வருகிறார் என மற்ற போட்டியாளர்கள் கூறுகிறார்கள். 

click me!