சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த பரணி இது போலீஸ் கேஸ், ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கணும். அதுவும் இல்லாமல் என்கிட்ட பேஸிக் திங்ஸ் தான் இருக்கு என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சௌந்தரபாண்டி இதை சொல்லவா நான் உன்னை டாக்டருக்கு படிக்க வச்சேன் என சத்தம் போட முத்துப்பாண்டி அதெல்லாம் தகவல் கொடுக்க முடியாது, என்னுடைய வேலை போய்டும் நீ ட்ரீட்மெண்ட் கொடு என அதிகாரமாக பேச பரணி அப்படியென்றால் என்னால் கொடுக்க முடியாது என பதிலடி கொடுக்கிறாள்.
Simran: நீங்க இல்லனா சினிமா இல்லை! சிம்ரன் இதயத்தை நொறுங்க வைத்த மரணம்! கண்ணீருடன் எமோஷ்னல் பதிவு!
முத்துப்பாண்டி வேறு வழியில்லாமல் நீ எனக்காக கொடுக்க வேண்டாம். அவர் உயிரை காப்பாற்ற ட்ரீட்மெண்ட் கொடு என சொல்ல சனியனும் என்னை காப்பாற்றுங்க என்று கதற பரணி அவருக்காக செய்கிறேன் என ட்ரீட்மெண்ட் கொடுக்கிறாள். மறுபக்கம் ஷண்முகம் வீட்டில் துப்பாக்கி எடுத்துட்டு போய் சண்டை போட்ட விஷயத்தை பெருமையாக சொல்லி கொண்டிருக்க ,வைகுண்டம் குண்டானை சுட்டதெல்லாம் ஒரு கதையாக சொல்லிட்டு இருக்க அந்த முத்துப்பாண்டினாலும் சனியனை சுட்டு இருக்கான், அந்த மாதிரி நீ சௌந்தரபாண்டியை சுட வேண்டியது தானே என திட்டிகிட்டு இருக்க அங்கு வரும் பரணி துப்பாக்கியை எடுத்துட்டு போய் இருக்க, உனக்கு எதாவது ஆகி இருந்தா உன் 4 தங்கச்சிங்களோட நிலைமை என்ன என திட்டுகிறாள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அடுத்ததாக ரூமுக்குள் ஷண்முகம் வந்ததும் பரணி உன்னை காப்பாற்றி இருக்கேன், எனக்கு நன்றி சொல்ல மாட்டியா என்று கேட்க நீ என்ன என்னை காப்பாற்றின என ஷண்முகம் கேட்க சனியனுக்கு நான் ட்ரீட்மெண்ட் கொடுக்காமல் வெளியே போய் இருந்தால் இந்த கேசில் நீயும் சேர்ந்து தான் மாட்டி இருப்ப என சொல்கிறாள். பிறகு எது இருந்தாலும் இன்னும் 60 நாள் தான் இந்த வீட்டில் இருப்பேன் எனவும் சொல்லி ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.