பாண்டியன் ஸ்டோஸ்ட் 2 சீரியல் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பே இல்லாமல் மிக சாதாரணமாக போய் கொண்டிருக்கிறது என ரசிகர்கள் பலர் கூறி வந்ததால், கதையில் இந்த வாரம் புதிய ட்விஸ்ட் வைத்துள்ளார்கள். பழனியின் கல்யாணத்தை வைத்து பாண்டியன்- சக்திவேல், முத்துவேல் இடையே நடக்கும் கெளரவ போராட்டத்தில் வெற்றி பெற போவது யார் என செம ட்விஸ்ட வைத்துள்ளார்கள்.
சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இரண்டாவது முறையாக பழனியின் திருமணம் நின்று போவது போல் புரோமோ வெளியாகி உள்ளது. இந்த வாரம் எதிர்பாராத பல திருப்பங்களும் இந்த சீரியலில் நடிக்க போகிறது.
விஜய் டிவி.,யில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. வழக்கமான கூட்டு குடும்ப கதை தான் என்றாலும் வாரத்திற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து, சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நடக்க போகும் ட்விஸ்ட் பழனியின் திருமணம் தான். பாண்டியன் ஏற்கனவே பார்த்த பெண்ணுடன் நடிக்க இருந்த திருமணத்தை, பழனியின் அண்ணன்கள் பெண் வீட்டில் சொல்லி நிறுத்தி விடுகிறார்கள். இதை பழனி சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மனம் உடைந்து போகிறார் பாண்டியன்.
பழனியின் திருமணம் :
பழனி தங்களுடன் இருந்தால் அவனுக்கு திருமணம் நடக்காது என யோசிக்கும் பாண்டியன், பழனியை அவர்கள் அண்ணன் வீட்டிற்கே அனுப்பி விடுகிறார். ஆனால் அண்ணன்கள், பாண்டியனை பழிவாங்குவதையே முக்கிய நோக்கமாக வைத்திருப்பதையும், அதற்கு தன்னையும் தன்னுடைய திருமணத்தையும் பகடை காயாக பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பழனி, ஒரே நாளில் பாண்டியன் வீட்டிற்கே திரும்பி வந்து விடுகிறார். பாண்டியன் சொன்ன படியே மீண்டும் பழனிக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து, திருமணமும் ஏற்பாடு செய்கிறார்.
மீண்டும் நின்று போகும் பழனியின் கல்யாணம் :
இந்த திருமணத்திலும் பிரச்சனை செய்யாமல் இருக்கும் படி கண்ணீருடன் கேட்கும் பழனியிடம், "கண்டிப்பாக இந்த முறை எதுவும் செய்ய மாட்டோம். நாங்களே முன் நின்று உன்னுடைய திருமணத்தை நடத்துகிறோம்" என வாக்குக் கொடுக்கிறார்கள் அவரது அண்ணன்கள். இதனால் நிம்மதியுடன் பழனியின் கல்யாண ஏற்பாடுகளும் தடபுடலாக நடக்கிறது. ஆனால் இந்த முறையும் அண்ணன்களின் சதியால்,தாலி கட்டும் சமயத்தில் பழனியின் திருமணம் நின்று போகிறது. சரி செய்யவே முடியாத பிரச்சனை என கூறி, பெண் வீட்டார் புறப்பட்டு சென்று விட, பழனிக்கு ஆறுதல் சொல்லி தேற்றுகிறார் பாண்டியன்.
இந்த வாரம் நடக்க போகும் ட்விஸ்ட் :
அந்த சமயத்தில் கல்யாண மண்டபத்திற்கு வரும் பழனியின் அண்ணன்களான சக்திவேல், முத்துவேல் இருவரும், வேறு ஒரு பெண்ணை கையோடு அழைத்து வருகிறார்கள். "இந்த பெண்ணிற்கு உன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம், நீ சம்மதிக்கிறாயா?" என பழனியிடம் கேட்கிறார்கள். தன்னுடைய கல்யாணம் தாங்கள் செய்து வைத்ததாக இருக்க வேண்டுமே தவிர, பாண்டியன் செய்து வைத்ததாக இருக்கக் கூடாது என்ற ஈகோவுடன் அண்ணன் தன்னுடைய கல்யாணத்தில் சதி செய்வதை புரிந்து கொள்கிறார் பழனி.
பழனியின் முடிவு என்ன?
பழனி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். பாண்டியனுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக சக்திவேலும், முத்துவேலும் செய்த சதி வேலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பழனியும், பாண்டியனும் கொடுக்கும் அதிர்ச்சி தான் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மிகப் பெரிய டுவிஸ்டாக இருக்க போகிறது.