Anna Serial: அவமானப்பட்ட சௌந்தரபாண்டி! கொடுத்த வார்னிங் ஷண்முகம் 'அண்ணா' சீரியல் சனி மற்றும் ஞாயிறு அப்டேட்!!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் அப்டேட். 
 


வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா என்ன நினைத்து வேறொரு பெண்ணை கடத்திய விஷயம் தெரிய வந்து சௌந்தரபாண்டி ஓடிவந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, முத்துப்பாண்டி ரத்னா என நினைத்து தாலி கட்ட போகும் சமயத்தில் அங்கு வரும் சௌந்தரபாண்டி அது ரத்னாவே கிடையாது என்று உண்மையை உடைக்க கடைசியில் அந்த பெண் வாய் பேச முடியாத ஊமை என தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து சௌந்தரபாண்டி நீ எல்லாம் ஆம்பளையா என முத்துப்பாண்டியை திட்டுகிறார். மறுபக்கம் மனோஜ் எப்படியாவது சண்முகத்தை கொன்று தீர வேண்டும் என தன்னுடைய தாத்தாவுடன் சேர்ந்து திட்டம் போடுகிறான். 

Latest Videos

இவ்வளவு சீப் ஆக நடந்துகொண்டாரா பிரதீப்... கமல் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதன் ஷாக்கிங் பின்னணி!

சண்முகம் தங்கைகளுடன் அமர்ந்து  சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, தாத்தா கனியின் கையை பிடித்து இழுத்து செல்ல சண்முகம் காப்பாற்ற ஓட எதிரில் மனோஜ் கத்தியுடன் வர முத்துப்பாண்டியின் ஆட்கள் என நினைத்து மனோஜை அடித்து துவம்சம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து தங்கைகள் கல்க்கோட்டையில் தூங்க சண்முகம் அவர்களுக்கு காவலாக இருக்க முத்துப்பாண்டி நாட்கள் மீண்டும் ரத்னாவை கடத்த அங்கு வந்தது, சண்முகம் சத்தமே வராமல் அவர்களுக்கு அடி கொடுத்து விரட்டி விடுகிறான். சௌந்தரபாண்டியை பார்க்க வந்த ரவுடிகள் சண்முகம் கொலவெறியில் இருக்கான், எங்களால எதுவும் செய்ய முடியாது என சொல்லி விடுகின்றனர். 

உள்ளே வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன வைல்ட் கார்டு போட்டியாளர்! யார் தெரியுமா ?

அதன் பிறகு சௌந்தரபாண்டி ரத்னாவிடம் நீயா வந்துட்டேனா உன் வீட்டுக்கு மருமகளா வரலாம் இல்லனா வேலைக்காரியா தான் வரணும் என் மிரட்ட அங்கு வரும் சண்முகம் சௌந்தரபாண்டியின் சட்டை பிடித்து உனக்கு அவ்வளவு தான் மரியாதை, திரும்பவும் என் தங்கச்சி விஷயத்தில் தலையிட்டா யாரா இருந்தாலும் கொன்னுட்டு தான் மறு வார்த்தை பேசுவேன் என மிரட்டல் விடுகிறான்.

சண்முகத்திடம் அவமானப்பட்ட சவுந்தரபாண்டி முத்துப்பாண்டியிடம் என் மானம் மரியாதை எல்லாமே போச்சு இப்ப என்ன பண்ண போற என ஆவேசப்படுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

click me!