குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலா, முதியோர் இல்லத்திற்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி உள்ளார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு கடந்த மூன்று சீசன்கள் தன்னுடைய டைமிங் காமெடிகளால் மக்களை மகிழ்வித்து வந்தார். தற்போது தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார் பாலா. பல்வேறு முன்னணி நடிகர்களின் பட விழாக்களை பாலா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதுதவிர சினிமாவிலும் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இப்படி சின்னத்திரை, சினிமா என பிசியாக நடித்து வரும் பாலா, தன்னுடைய சொந்த செலவில் பல்வேறு சமூக நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போதே ஏழைக்குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவது என ஏராளமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அண்மையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து அவருக்கு பண உதவி செய்தார்.
இதையும் படியுங்கள்... ஹீரோயின்களையே மிஞ்சும் அளவுக்கு நீச்சல் உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்த அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா
இவ்வாறு ஆதரவற்றோருக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலா, அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார். அதாவது முதியோர் இல்லத்திற்காக ஆம்புலன்ஸ் வாங்கித் தர வேண்டும் என்பது பாலாவின் 5 ஆண்டு கால கனவாக இருந்துள்ளது. அந்த கனவை தனது பிறந்தநாளன்று நனவாக்கி இருக்கிறார் பாலா.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “5 வருட கனவு நனவாகிடுச்சு. எப்படியாவது ஹோம்ல இருக்கிற பெரியவங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்கனும்னு நினைச்சேன் என் கிட்ட காசு இல்ல. ரொம்ப நாளா காசு சேர்ந்து எப்படியோ என்னுடைய சொந்த காசுல ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துட்டேன். இதுக்கப்புறம் பெரியவங்கம் செக்-அப்புக்கு ஆட்டோல போக வேண்டாம், ஆம்புலன்ஸ்லயே போகலாம் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். பாலா செய்துள்ள இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... 2023-ல் முதல்பாதி ஓவர்... தமிழ் சினிமாவின் 6 மாத பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் என்ன? யாருக்கு முதலிடம்- முழு விவரம் இதோ