கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா, இந்த முறை பங்கேற்க..
இந்திய மொழிகள் பலவற்றுள் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தமிழ் மொழியை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெளியாகியுள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 7 துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த 7வது சீசனுக்கான ஆடிஷன் நடந்து வருவதாகவும் அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. விஜய் டிவி சரத் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோரும், தொகுப்பாளினி பாவனா மற்றும் நடிகை உமா ரியாஸ் மற்றும் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் உள்ளிட்டோர் இந்த ஆடிஷனில் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் கசிந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7ல் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா இந்த முறை பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பஸ் ஓட்டுநர் ஷர்மிளா
அண்மையில் கோவையில், பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பெரிய அளவில் மக்களின் பாராட்டுகளை பெற்று வந்தார். இந்நிலையில் திமுக தலைவர் கனிமொழி, ஷர்மிளாவை பாராட்டும் வகையில் கோவை முதல் பீளமேடு வரை செல்லும் ஷர்மிளா ஓட்டும் தனியார் பேருந்தில் பயணம் செய்தார், அப்போது அவருக்கு ஒரு வாட்ச் ஒன்றையும் பரிசளித்தார்.
இதையும் படியுங்கள் : விபச்சாரியாக நடித்து வில்லங்கத்தில் சிக்கிய தமிழ் நடிகைகள்
ஆனால் இந்த நிகழ்வு முடிந்து தனது அலுவலகம் சென்ற ஷர்மிளா, அந்த பஸ் கண்டக்டர் மீது தனது முதலாளியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த கண்டக்ட்ர், ஷர்மிளா தனது வீண் விளம்பரத்திற்காக பிரபலங்களை வண்டியில் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தியதாக பதில் புகார் தெரிவிக்க, நிர்வாகம் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கியது.
கமல்ஹாசனை சந்தித்த ஷர்மிளா
ஷர்மிளாவை வேலையை விட்டு அனுப்பியதை எதிர்த்து பலர் குரல் கொடுத்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு மக்கள் நீதி மையம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பேசி, அவருக்கு ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் பரிசாக அளித்துள்ளார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பல வகையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புவார்கள். ஆகையால் ஷர்மிளா பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : கணவருடன் சண்டை... விவகாரத்துக்கு தயாராகும் நடிகை அசின்?