கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் உறவு... கேக்கும்போதே கூசுது - சம்யுக்தாவை சரமாரியாக சாடிய விஷ்ணுகாந்த்

By Ganesh A  |  First Published Jun 5, 2023, 9:07 AM IST

சீரியல் நடிகை சம்யுக்தா தன் மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் விஷ்ணுகாந்த் சமூக வலைதளம் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார்.


சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த விஷ்ணுகாந்த், அதே சீரியலில் தன்னுடன் நடித்த சம்யுக்தா என்பவரை காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். திருமண முறிவுக்கு பின்னர் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் கடந்த ஒரு மாதமாக ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில், நடிகை சம்யுக்தா தனது பெற்றோருடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஷ்ணுகாந்த் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகவும், தன்னிடம் ஆபாச படம் காட்டி, அதுபோல் செய்ய சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி பெட்ரூமில் கேமரா வைக்கப்போவதாகவும், 24 மணிநேரமும் விஷ்ணுகாந்த் செக்ஸ் மூடில் தான் இருப்பார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் சம்யுக்தா.

Tap to resize

Latest Videos

சம்யுக்தாவின் இந்த சரமாரி புகாருக்கு நடிகர் விஷ்ணுகாந்த் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது : “முதல் இரவில் பெட்ரூமில் கேமரா வைக்கணும்னு சொன்னதா சொல்றாங்க. உண்மையாவே அதை கேட்கும்போதே எனக்கு உடம்பு ரொம்ப கூசுச்சு. யார்ரா இப்படி நினைப்பாங்கங்குற மாதிரி எனக்கு தோணுச்சு. அதெல்லாம் முழுக்க முழுக்க பொய். நான் செக்ஸ் மாத்திரை போடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் சொல்றது உண்மையானு தெரிஞ்சிக்க நான் டெஸ்ட் எடுக்க ரெடியா இருக்கேன். அந்த பரிசோதனை முடிவில் நான் போதை மாத்திரை பயன்படுத்தி இருப்பது உறுதியானால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்க தயாரா இருக்கேன்.

இதையும் படியுங்கள்... செக்ஸுக்காக மாத்திரை... பெட்ரூமில் சிசிடிவி - விஷ்ணுகாந்தின் லீலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன சம்யுக்தா

சம்யுக்தாவால ஒரு ஜோடி விவாகரத்து செய்யுற நிலையில இருக்காங்க. அவங்க கிட்ட ஏமாந்த பசங்க எல்லாருமே ஆதாரம் வச்சிருக்காங்க. அழுது அழுது பேசுனா எல்லாம் உண்மை ஆகிடுமா. நான் சம்யுக்தாவை கல்யாணம் பண்ணி ஏமாறல, ஜெயிச்சிட்டேன். இனிமே எந்த ஒரு பையனும் உங்க கிட்ட ஏமாந்திட கூடாதுனு போலீஸ் ஸ்டேஷன்லயே சொன்னேன். அவங்க பண்ற தப்ப நான் கேள்வி கேட்டது அவங்களுக்கு பிடிக்கல. அதுக்காக தான் அவங்கள நான் செக்ஸ் டார்ச்சர் பண்ணதா சொல்லிக்கிட்டு இருக்காங்க.

கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க சந்திச்சதே இல்ல, எங்கயுமே போனதே இல்லனு சொல்றாங்க. கல்யாணத்துக்கு அப்புறம், என்னுடன் இருந்த 15 நாள்ல தான் நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததா சொல்றாங்க. ஆனா அது உண்மை கிடையாது. உண்மையில் நாங்கள் 8 மாதம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம். கல்யாணம் ஆகும்போது Virginity ஓட தான் போனேன்னு சொல்றாங்க, அதுவும் பொய். ஏன்னா, ரவி என்பவருடன் சம்யுக்தா உறவு வைத்திருந்தார். அதற்கான ஆடியோ ஆதாரமும் லீக் ஆனது. என் வீட்டுக்கே வந்ததில்லைனு சொல்றாங்க. ஆனா எங்கவீட்ல நாங்க அவ்ளோ ரீல்ஸ் எடுத்திருக்கோம்” என விஷ்ணுகாந்த் கூறி இருக்கிறார். இப்படி இருவரும் மீண்டும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால் இவர்களது விவாகரத்து விஷயம் மீண்டும் பேசுபொருள் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... விஷ்ணுகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படிப்பட்டவர்? சம்யுக்தா பிரச்சனைக்கு நடுவே வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை!

click me!