சீரியல் நடிகை ஆல்யா மானசா, 'இனியா' சீரியல் குழுவினருக்கு, தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு பிரியாணி விருந்து வைத்து அசத்தியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு டான்சராக இருந்து பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில் கதாநாயகியாக மாறியவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் செம்பா என்கிற அப்பாவி பெண்ணாக நடித்த ஆல்யாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது. தற்போது ஆல்யாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, காதல் சர்ச்சைகளில் சிக்கிய ஆல்யா தன்னுடன் 'ராஜா ராணி' சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஐலா என்ற மகளும் , அர்ஷ் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர், ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்ததால், சீரியல்களில் நடிக்காமல் இருந்த நிலையில்... ஐலா பிறந்த பின்னர் மீண்டும் 'ராஜா ராணி 2' சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
பக்கா பொருக்கி மாதிரி இருக்க? அனிதா சம்பத்தை அசிங்கப்படுத்திய நெட்டிசன்! வேற லெவல் பதிலடி!
திருமணம் சீரியல் சித்துவுக்கு ஜோடியாக இந்த சீரியலில் நடித்திருந்தார். இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக ஆல்யா கர்ப்பமானார். எனவே பாதியிலேயே இந்த சீரியலில் இருந்து ஆல்யா வெளியேறிய நிலையில், இவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் நடித்து வந்தார். இரண்டாவது குழந்தை பிறந்த 6 மாதத்தில் மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்த ஆல்யா, விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு சீரியலுக்கு தாவினார்.
விஜய்யுடன் 'லியோ' படத்தில் நடிக்கும் நாசரின் சகோதரர் ஜவஹர்! அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..!
அந்த வகையில் தற்போது சன் டிவியில் பீக் அவரில் ஒளிபரப்பாகி வரும், 'இனியா' தொடரில் துணிச்சலான, பெண் உரிமை பற்றி பேசும், சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும், மற்ற சீரியல்களுக்கு டிஆர்பி-யில் செம டஃப் கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் ஆல்யா மானசாவுக்கு ஜோடியாக நடிகர் ரிஷி நடித்து வருகிறார். முதலில் நெகட்டிவ் கதாபாத்திரமாக காட்டப்பட்ட ரிஷி, தற்போது பாசிட்டிவ் கதாபாத்திரமாக மாறி உள்ளதால், இந்த சீரியல் மேலும் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் ஆல்யா மே 27 ஆம் தேதி, தன்னுடைய 28 வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இவருக்கு தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்த சஞ்சீவ் ஒரு மியூசிக் ஈவண்ட்டையும் ஏற்பாடு செய்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகியது. இதைத்தொடர்ந்து ஆல்யா, இனியா சீரியல் குழுவினருக்கு தடபுடலாக பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.