குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி கெட்-அப்பில் வந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினார் புகழ்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆன குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து, தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, காளையன், ஸ்ருஷ்டி டாங்கே என ஏராளமான பிரபலங்கள் குக்குகளாக கலந்துகொண்டு உள்ளனர். இதில் குறிப்பாக கடந்த சீசன்களில் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீசனில் குக் ஆக புரமோட் ஆகி கலக்கி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதில் வரும் கோமாளிகள் தான். அந்த வகையில் இந்நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன புகழ், பாலா, ஷிவாங்கி ஆகியோர் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசனில் கலக்கிய பாலா இந்த சீசனில் இடம்பெறாவிட்டாலும், அவருக்கு பதிலாக புகழ் கலந்துகொண்டு ஒவ்வொரு வாரமும் விதவிதமான கெட்-அப்களில் வந்து கலக்கிக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிறு வயதில் வாழ்ந்த... கேரளா மற்றும் இலங்கையில் உள்ள வீட்டை பார்த்திருக்கீங்களா?
அந்த வகையில் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி கெட்-அப்பில் வந்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினார். அவரின் அந்த கெட்-அப் தத்ரூபமாக இருந்ததைப் பார்த்து அங்கிருந்த குக் வித் கோமாளி பிரபலங்களே கண்கலங்கிப் போயினர். அந்த கெட்-அப் போட தான் 4 மணிநேரம் எடுத்துக்கொண்டதாகவும், அப்போது எடுத்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் புகழ்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பதான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்... என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஏலே படத்தை.. இரக்கமே இல்லாம திருடிருக்காங்க..! மம்முட்டி படத்தை வெளுத்து வாங்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம்