இனி நான் அமெரிக்கா Anchor.. ரசிகர்களுக்கு டாடா சொல்லிவிட்டு புறப்பட்ட மணிமேகலை!

By Ansgar R  |  First Published Jun 28, 2023, 10:51 AM IST

இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் அசத்தலான பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் மணிமேகலை


திருப்பூரில் பிறந்து பட்டப் படிப்பை முடிக்கும் முன்பே தனது 17வது வயதிலேயே பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை. சுமார் 14 ஆண்டுகளாக இவர் இந்த துறையில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். 

MBA பட்டதாரியான மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு துணை நடன இயக்குனராக இருந்த ஹுசைன் ஷாஹித் காதர் என்பவரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஐந்து ஆண்டுகளாக "அட ஜோடிகள்னா இப்படி இருக்கணும்" என்று பலரும் கூறும் அளவிற்கு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள் : துரோகம் செய்த கணவர்.. கடுப்பான நடிகை அசின்.. விவாகரத்து கன்பார்மா?

ஒரு சிறு பொருளை வாங்கினால் கூட அதை தன் ரசிகர்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் உடனே சொல்லிவிடுவார் மணிமேகலை. (இடையில் ஒரு பைக் காணாமல் போனது - அது வேற விஷயம்) Instagram பக்கத்தில் இவரை 3.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மணிமேகலின் புகழை தற்பொழுது உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. 

இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் அசத்தலான பல வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் மணிமேகலை, அண்மையில் இசை புயல் ரகுமான் அவர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று காலை அவர் வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் Anchor செய்ய கிளம்பிவிட்டேன் என்றும், நான் போடவிருக்கும் அடுத்த இன்ஸ்டாகிராம் போஸ்டில் உங்களை அமெரிக்கா மணிமேகலையாக சந்திக்கிறேன் என்று கூறி, மகிழ்ச்சியோடு ரசிகர்களிடமிருந்து விடை பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : மகளா போயிட்டார் இல்லனா திருமணம் செஞ்சிப்பேன்! சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர்! 

click me!