பிக் பாஸ் ஜாக்கிரதையா இருங்க - கன்டென்ட் கொடுக்கவே "அவதாரம்" எடுத்தவர் பராக் - யார் இந்த கூல் சுரேஷ்?

Ansgar R |  
Published : Oct 01, 2023, 07:13 PM IST
பிக் பாஸ் ஜாக்கிரதையா இருங்க - கன்டென்ட் கொடுக்கவே "அவதாரம்" எடுத்தவர் பராக் - யார் இந்த கூல் சுரேஷ்?

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்பொழுது துவங்கியுள்ளது, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே வெற்றிகரமாக தனது ஆறு சீசன்களை கடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருக்கப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசனில் முதல் போட்டியாளராக பிரபல நடிகர் கூல் சுரேஷ் களம் இறங்கியுள்ளார். 

கடந்த 2001ம் ஆண்டு வெளியான டாப் ஸ்டார் பிரசாந்தின் "சாக்லேட்" திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், நடிகர் சிலம்பரசன் மற்றும் அவரது தந்தை டி. ராஜேந்தர் ஆகிய இருவரோடும் இணைந்து பல சினிமா மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை நாம் நிச்சயம் பார்த்திருப்போம்.

சிவகார்த்திகேயன் மேல் ரஜினிக்கு அப்படி என்ன கோவம்... அயலானை அடிச்சு நொறுக்க வருது லால் சலாம் - ரிலீஸ் தேதி இதோ

யார் இந்த கூல் சுரேஷ்?

தமிழ் சினிமா வரலாற்றில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அதன் பிறகு பலருக்கும் தெரியும் வண்ணம் உயர்ந்த நடிகர்களின் பட்டியலில் கூல் சுரேஷ் அவர்களும் ஒருவர். கடந்த 22 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் கூல் சுரேஷ், பல திரைப்படங்களில் சிம்புவின் நண்பனாகவும் அல்லது எதிரி கேங்கில் இருக்கும் ஒரு நபராகவும் நடித்திருக்கிறார். 

குறிப்பாக இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான நான்கு திரைப்படங்களில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். 

தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்துள்ள கூல் சுரேஷ் அவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி International Human Peace University என்ற அமைப்பு  கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 22 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் தான் கூல் சுரேஷ். 

சோசியல் மீடியா பிரபலம்.. இளம் வயதிலேயே அன்னைக்கு நிகரான புகழ் - யார் இந்த ஜோவிகா வனிதா விஜயகுமார்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்