Ethirneechal : பெண்கள் தங்களுக்கு எதிரான அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் ஒரு கதைக்களம் கொண்ட மெகா ஹிட் சீரியல் தான் எதிர்நீச்சல். ஆனால் கடந்த சில காலமாகவே மக்கள் மத்தியில் எதிர்நீச்சலுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தொடர்ந்து டிஆர்பி-யிலும் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சாதனைகளையும், வரவேற்பையும் பெற்று வரும் ஒரு நாடகம் தான் எதிர்நீச்சல். மிகவும் எதார்த்தமான கதைகளத்தோடு உருவாகியுள்ள இந்த நாடகத்திற்கு மக்கள் மத்தியில் தொடக்கத்தில் இருந்து மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பல இடங்களில் பெண்கள் மீதுள்ள அடக்குமுறையாக அப்படியே பிரதிபலிக்கிறது எதிர்நீச்சல் என்று மக்கள் பாராட்டி வந்தனர்.
அதிலும் குறிப்பாக இந்த நாடகத்தில் வரும் குணசேகரன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்து இருந்த வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பதற்கு எதிர்நீச்சல் சீரியல் தவறியதே இல்லை. ஆனால் அவர் இல்லாத குறையோ என்னவோ தெரியவில்லை புதிதாக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேல ராமமூர்த்தி மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும், கடந்த சில காலமாக எதிர்நீச்சல் டல்லடிக்கிறது என்பது மக்களின் கருத்து.
அதிலும் குறிப்பாக குணசேகரன் போடும் பிளான் எல்லாம் சூப்பர் ஹிட்டாக, அவரை எதிர்த்து நல்லவர்களாக மாறியுள்ள தம்பிகள் மற்றும் மருமகள்கள் போடும் பிளான் எல்லாம் சூப்பர் சொதப்பலாகி வருகின்றது. தைரியமான பெண்ணாக இருந்த குணசேகரன் மகள் இப்பொது வாயடைத்து நிற்கிறார். அவரை எதிர்த்த மகன், தந்தை சொல்படி கேட்கின்றார். மனம் மாறிய அம்மாவும் மௌனம் காக்கின்றார். என்று ஒரு குளறுபடியாக நடந்து வருகின்றது எதிர்நீச்சல்.
இப்படி தொடர்ச்சியாக குணசேகரன் ஜெயித்து வருவதை கண்ட மக்கள் மிகப்பெரிய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் திருச்செல்வம் மீது தான் மக்கள் பாய்கின்றனர். எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்க.. அவங்க போன்ற பிளான் எல்லாம் எப்போதான்பா ஜெயிக்கும் என்ற நிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டனர். கரிகாலன் வேறு அந்த மாப்பிள்ளையை தப்பிக்கவைத்து விட்டார்.
சரி அடுத்த அவருக்கும், குணசேகரன் மகளும் திருமணம் நடக்குமா? அல்லது அவரது காதலியுடன் திருமணம் நடக்குமா? கரிகாலன், சக்தியிடம் தர்ம அடி வாங்குவாரா? இந்த கல்யாணம் என்ன ஆகும்? என்பதற்கு எல்லாம் திருச்செல்வம் என்ன பதில் வைத்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.