கயலுக்கும் - எழிலுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் நிலையில், இந்த சீரியல் பற்றிய லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய தொடர்களில் ஒன்று கயல். ஒவ்வொரு வாரமும் TRP-யில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ள இந்த சீரியல், குடும்பத்தை காப்பாற்ற தன்னந்தனியாக போராடி வரும் கயல் என்கிற கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
தன்னுடைய சொந்த தம்பி குடும்பம் ஏழ்மையில் இருந்தாலும், அவர்களை வளரவே விடக்கூடாது என நயவஞ்சகத்துடன் இருக்கும் பெரியப்பா தர்மலிங்கம், எப்படியும் கயலை தன்னுடைய காலில் ஏதேனும் ஒரு விஷயத்திற்காகவாது விழ வைக்க வேண்டும் என நினைக்கிறார். நல்லவர் போல் கயல் குடும்பத்துடன் உறவாடிக்கொண்டே, பல குடைச்சல்கள் கொடுக்க.. அனைத்தையுமே மிகவும் சாமர்த்தியமாக சமாளித்து, தன்னுடைய அண்ணன், தம்பி, தங்கைகளை கரைசேர்க்க போராடி வருகிறார் கயல்.
வெக்கி தலைகுனிய வேண்டும்... கொடூரத்தின் உச்சம்! மணிப்பூர் சம்பத்துக்கு எதிராக பொங்கிய பிரபலங்கள்!
கயல் தான் வாழ்க்கை என சிறு வயதில் இருந்தே... ஹீரோ எழில் உருகி உருகி காதலித்து வரும் நிலையில், தன்னுடைய குடும்ப சூழலுக்காக தொடர்ந்து, எழிலின் மேல் உள்ள காதலை மறைத்து கொண்டு வாழும் கயலுக்கு, திருமண மண்டபத்தில் எழிலை கல்யாண கோலத்தில் பார்க்கும் போது காதல் உணர்வு புரிய வருகிறது.
ரசிகர்களும், ஏதாவது மேஜிக் நடந்து, எழில் மற்றும் கயல் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர வேண்டும் என எதிர்பார்க்கும் நிலையில், கயலை திருமண மண்டபத்திற்குள்ளும் பல பிரச்சனைகள் சுழற்றி அடிக்கிறது. அதிலும் தற்போது, எழிலின் அம்மா... கௌதமிடம் பேசி கொண்டிருக்கும் போது, காயலிடம் கையும் களவுமாக சிக்கியது தான் ஹை லைட். கயலின் வாழ்க்கையை கெடுக்க கூறி, சூர்யாவை செட் பண்ணியது நான் தான் என, என் மகனுக்கு தெரிந்தால் அவன் என்னை மன்னிக்கவே மாட்டான் என கூற, இதனை கயல் கேட்டு விடுகிறாள்.
கயலின் அம்மாவை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு... இதை நீ செஞ்சி இருப்பனு கனவுல கூட நினைத்து பார்க்கவில்லை என கூற, இந்த விஷயம் தன்னுடைய மகனுக்கு தெரிய வேண்டாம் என, கயலின் காலில் விழுந்து கெஞ்சுகிறார். பின்னர், கயலை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறும் எழில் ... மண்டபத்தில் திடீர் என நடக்கும் பிரச்சனைகளால், அனைவரின் சம்மதத்துடன் கயலை திருமணம் செய்து கொள்வாராம். வழக்கம் போல் தர்மலிங்கம் மகளின் திருமண விஷயத்திலும் மூக்குடைந்து கோவத்தில் வீட்டுக்கு கிளம்புவாராம். இதுதான் அடுத்து நடக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.