சின்னத்திரையில் கலக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடிக்கும் மதுமிதா புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
சின்னத்திரையில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த சீரியலுக்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரசிகர்களிடம் கிடைத்து வரும் அமோக வரவேற்பின் காரணமாக சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் சீரியல் என்கிற சாதனையை படைத்துள்ளது எதிர்நீச்சல்.
இந்த சீரியல் இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு அதன் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடிக்கும் திறமையான நடிகர், நடிகைகளும் தான் காரணம். எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் மாரிமுத்து, ஜனனி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி என அனைவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையும் படியுங்கள்... சீக்ரெட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... இம்முறை விவாகரத்துக்கு வாய்ப்பே இல்ல - அதிர்ச்சி கொடுத்த வனிதா
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரின் ஹீரோயினான ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா, தற்போது புது கார் ஒன்றை வாங்கி உள்ளார். கியா நிறுவனத்தின் சோனட் கார் வாங்கியுள்ளதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மதுமிதா. இதைப்பார்த்த ரசிகர்களும், எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்களும் மதுமிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த காரின் விலை ரூ.18 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
புதிதாக கார் வாங்கி உள்ளது குறித்து நடிகை மதுமிதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது : “இந்தக் கார் என்னுடைய கனவு அல்ல, அதை நிஜமாக்கி உள்ளேன். என்னுடைய முதல் பெரிய குழந்தையை வாங்கி உள்ளேன்” என அந்த பதிவில் நடிகை மதுமிதா குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக வந்த ஹுகூம் பாடல்... ரிபீட் மோடில் கேட்கும் ரசிகர்கள்