திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்துள்ள ஜனனியின் லிப்லாக் முத்தக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூடிய இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த தொடரின் வெற்றிக்கு அதில் நடித்து வரும் நடிகர்களும் முக்கிய காரணமாக திகழ்கிறார்கள். குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரி முத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அவர் வில்லத்தனமான நடிகராக இருந்தாலும், அவர் பேசும் டயலாக்குகள் ஒவ்வொன்றும் இன்று மீம் டெம்பிளேட்டுகளாக மாறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து உள்ளன. இதுதவிர மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, அருண் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. இந்த தொடரின் இயக்குனர் திருச்செல்வமும், ஜீவானந்தம் என்கிற கேரக்டரில் கலக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... கின்னஸ் சாதனை படைத்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... அடேங்கப்பா இவருக்குள் இவ்ளோ திறமையா!
இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி நெட்டிசன்கள் இணையத்தில் அதிகம் தேடி வருவதால், அவர்களைப் பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இதில் நடித்துள்ள மோனிஷா கின்னஸ் சாதனை படைத்துள்ளவர் என்கிற தகவல் அண்மையில் வெளியானது. அதேபோல் இதில் வில்லனாக நடிக்கும் எஸ்.கே.ஆர் நிஜத்தில் ஒரு பிசினஸ் மேன் என்பதும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதா, முன்னதாக நடித்த தெலுங்கு சீரியலில் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியலில் அமைதியின் சிகரமாக இருக்கும் ஜனனியா இது என பலரும் அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ எதிர்நீச்சல் குணசேகரன் பாணியில் இந்தாம்மா ஏய் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். சிலரோ இதை ஆதி குணசேகரன் பார்த்தா என்ன ஆகுறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜனனியின் இந்த லிப்கிஸ் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது.
Telugu serials baga improve autunai masteruuu 😜 pic.twitter.com/pSy0wTRqUi
— Tom (@Hodophile1322)இதையும் படியுங்கள்... சீரியலில் வில்லன்; நிஜத்தில் பிசினஸ்மேன்.. யார் இந்த எதிர்நீச்சல் எஸ்.கே.ஆர்? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்