Mi Students Plus Program: கல்லூரி மாணவர்களுக்கு ஆஃபர் விலையில் Mi, Redmi தயாரிப்புகள்!

Published : Feb 13, 2023, 12:42 PM IST
Mi Students Plus Program: கல்லூரி மாணவர்களுக்கு ஆஃபர் விலையில் Mi, Redmi தயாரிப்புகள்!

சுருக்கம்

ஷாவ்மி நிறுவனம் யுனிடேஸ் தளத்துடன் கைகோர்த்து, மாணவர்களுக்கான சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

Xiaomi India நிறுவனம் Xiaomi Students Plus என்ற பெயரில் புதிய பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மாணவர்கள் தயாரிப்புகளை வாங்கும் போது பல்வேறு தள்ளுபடி ஆஃபர்களை வழங்குகிறது. இதற்காக ஷாவ்மி நிறுவனம் UNiDAYS உடன் கை கோர்த்துள்ளது. யுனிடேஸ் என்பது உலகளாவிய அளவில் மாணவர்களுக்கான தள்ளுபடி ஆஃபர்கள் வழங்கும் இணையதளமாகும். இதன் மூலம் மாணவர்கள் Xiaomi தயாரிப்புகளை வாங்கும்போது ரூ.2000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். 

இந்த தள்ளுபடி ஆஃபர் தற்போது Xiaomi நிறுவனத்தின் Mi Store செயலியில் கிடைக்கிறது. தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள் முதலில் UNiDAYS போர்ட்டலில் இருக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விவரங்கள் யுனிடேஸ் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

Xiaomi ஸ்டூடண்ட்ஸ் பிளஸ் புரோகிராம் சலுகைகளை பெறும் முறை:

  • படி 1: Mi Store செயலியை இன்ஸ்டால் செய்து திறக்கவும்.. 
  • படி 2: யுனிடேஸ் போர்ட்டலில் மாணவராகப் பதிவு செய்யவும்.
  • படி 3: UniDays ஆஃபர் பக்கத்திலிருந்து கூப்பன் கோடை சேகரிக்கவும்.
  • படி 4: Mi ஸ்டோர் செயலி மூலம் உங்களுக்கு பிடித்த தயாரிப்புகளை கார்ட்டில் சேர்த்து, ஆர்டர் செய்யும் போது அந்த கூப்பன் கோடை பயன்படுத்தவும்.

Oppo Reno 8T இன்று முதல் விற்பனை! ஆஃபர் விலை விவரங்கள் இதோ!!

ஷாவ்மியின் ஸ்டூடண்ட் பிளஸ் பிளானில் வழங்கப்படும் சலுகைகள்:

  • Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி
  • Xiaomi மற்றும் Redmi லேப்டாப்களுக்கு 45% வரை தள்ளுபடி
  • Xiaomi மற்றும் Redmi டேப்லெட்டுகளுக்கு 45% வரை தள்ளுபடி
  • லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளுக்கு 45% வரை தள்ளுபடி

Mi Protect, Mi Extended Warranty மற்றும் Mi Complete Protect உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு பிளான்களுக்கும் 50% தள்ளுபடி
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?