வாட்ஸ்அப் செயலியில் HD தரத்திலான படங்களை அனுப்பும் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி HD படங்களை அனுப்புவது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.
WhatsApp நிறுவனம் அண்மையில் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்தது, இது பயனர்கள் அசல் தரத்தில் புகைப்படங்களை அனுப்ப உதவுகிறது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, iOS பயனர்களுக்குக் கிடைக்கிறது. இதன் மூலம் , 'சிறந்த தரத்தில் அனுப்ப' வேண்டுமா, அல்லது டேட்டாவை மிச்சப்படுத்தும் வகையில் அல்லது சுருக்கப்பட்ட வடிவத்தில் அனுப்ப வேண்டுமா என்பதை தேர்வு செய்துகொள்ளலாம். இது போல் படத்தின் தரத்தைத் தேர்ந்தெடுக்கும் திறன் என்பது நீண்ட எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாகும். இருப்பினும், வாட்ஸ்அப் நிறுவனம் அதை அனைத்து பயனர்களுக்கும் வெளியிடவில்லை.
இது குறித்து வாட்ஸ்அப் பீட்டா இன்போ தளத்தில் சில விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்கும் HD தரத்தில் படங்களை அனுப்பும் வசதி கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது மேம்பாட்டு பணியில் உள்ளது, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை அசல் தரத்தில் அனுப்புவது எப்படி
புகைப்படத் தர அம்சம் தற்போது iOS மற்றும் Android WhatsApp பயனர்களுக்குக் கிடைக்கிறது. செயலியின் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று பயனர்கள் இப்போது பிரத்யேக தரத்தில் படங்களை அனுப்பும் வசதிகளை பார்க்கலாம். புகைப்படத்தின் தரத்தை அமைக்க -
- WhatsApp செயலியைத் திறக்கவும்.
- அமைப்புகளுக்குச் செல்லவும்.
- இப்போது ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா> மீடியா அப்லோட் தரம் என்பதை கிளிக் செய்யவும்..
- அப்லோடு குவாலிட்டி என்ற பிரிவின் கீழ், மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். 'ஆட்டோ', 'சிறந்த தரம்' அல்லது 'டேட்டா சேவர்' (தரவைச் சேமிக்க சுருக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்புதல்). அதில் உங்களுக்கான புகைப்படத்தின் தரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இனி WhatsApp மூலமாகவே நோட்ஸ் எடுக்கலாம், போன் கால்களுக்கு அலாரம் வைக்கலாம்!
இவற்றில் HD படங்களின் மெமரி சற்று அதிகமாக இருக்கும். எனவே, HD படங்களை அனுப்புவதற்கு WhatsApp சிறிது நேரம் எடுக்கும் மற்றும் அதிக டேட்டாவை உட்கொள்ளும்.
- மேலும், அமைப்புகளில் புதிய புகைப்படத் தர விருப்பத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், உங்கள் பயன்பாட்டைப் புதுப்பிக்கவும் அல்லது வரவிருக்கும் நாட்களில் அனைவருக்கும் இந்த அம்சத்தை WhatsApp வழங்கும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவும்.