Gmail Tips: உங்கள் ஜிமெயிலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 6 டிப்ஸ்!

By Dinesh TG  |  First Published Jan 6, 2023, 10:50 AM IST

ஜிமெயில் டெம்ப்ளேட்களை உருவாக்குவது முதல் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் மின்னஞ்சல்களைப் படிப்பது வரை, உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும் 6 முக்கிய டிப்ஸ்களை இங்குக் காணலாம்.
 


டெம்ப்ளேட் வைத்து கொள்ளுங்கள்:

பெரும்பாலான அலுவல் மின்னஞ்சல்களானது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட டெம்ப்ளேட் வடிவத்தில் தான் இருக்கும். ஜிமெயில் மூலம் , நீங்கள் பலருக்கும் ஒரே மாதிரியான ஜிமெயில்களை அனுப்ப வேண்டியிருந்தால், அதற்கு மிகவும் எளிமையான ஜிமெயில் டெம்ப்ளேட்களை பயன்படுத்தலாம். இவ்வாறு டெம்ப்ளேட்டுகளை பயன்படுத்தும் அம்சம் என்பது ஜிமெயில் வெப் தளத்தில் மட்டுமே உள்ளது. மொபைல் செயலியில் இல்லை.

Tap to resize

Latest Videos

ஜிமெயில்களை செடியூல் செய்யலாம்:

கொஞ்சம் கழித்து ஜிமெயில்களை அனுப்ப வேண்டுமா? அதுவும் வெவ்வேறு நபர்களுக்கு அனுப்ப வேண்டுமா? உங்கள் ஜிமெயில்களைத் திட்டமிடுங்கள். ஜிமெயிலைத் செடியல் செய்ய, Send ஐகானுக்கு அடுத்துள்ள கீழ் அம்புக்குறியைத் தேடி, அதைக் கிளிக் செய்து, 'Schedule Send' என்பதைக் கிளிக் செய்யவும். அதற்கேற்ப நேரத்தையும் தேதியையும் அமைக்கலாம்.

‘சிக்னேச்சர்’ அமைக்கலாம்:

ஒவ்வொரு ஜிமெயிலின் முடிவிலும் Thank you, Yours Truly போன்ற ஒரே வார்த்தைகளைத் டைப் செய்வதில் சோர்வாக இருக்கிறதா? அடுத்த முறை ஜிமெயிலை அனுப்பும் போது, ​​அந்த 'வணக்கங்கள் மற்றும் வாழ்த்துகள்' தானாகவே தோன்றும் வகையில் ‘சிக்னேச்சர்’ அமைக்க முயற்சிக்கவும். அமைப்புகளைக் கிளிக் செய்து, ‘சிக்னேச்சர்’ பிரிவில் உங்கள் ‘சிக்னேச்சர்’ சேர்ப்பதன் மூலம் உங்கள் ‘சிக்னேச்சர்’ அமைக்கலாம். உங்கள் ‘சிக்னேச்சர்’ Font  மாற்றலாம் மற்றும் படத்தை சேர்க்கலாம். 

Chrome Update: இந்த 2023 ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்களில் Google Chrome சேவை நிறுத்தம்!

ஒரே கிளிக்கில் பல மெயில்களை டெலிட் செய்யலாம்:

ஜிமெயில்களை டெலிட் செய்வது சில நேரங்களில் எரிச்சலாக இருக்கலாம், குறிப்பாக உங்கள் இன்பாக்ஸில் ஸ்பேம், தேவையற்ற அஞ்சல்கள் நிறைய இருக்கும் போது. ஜிமெயில்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, 'அனைத்தையும் தேர்ந்தெடு' ஆப்ஷனைப்  பயன்படுத்தவும், அனைத்தையும் மொத்தமாக டெலிட் செய்துவிடும்.

Search Bar:

பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முக்கியமான ஜிமெயிலைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? ஸ்க்ரோலிங் செய்வதை நிறுத்தி, தேடல் பட்டியைப் பயன்படுத்தவும். அதில், ஜிமெயிலின் சப்ஜெகட், அல்லது அனுப்புநரின் பெயரை டைப் செய்யவும். இதனால், அந்த குறிப்பிட்ட ஜிமெயில்களைக் மிகவும் எளிதாக கண்டறியலாம்
 

click me!