Gmail Tips 2023:ஜிமெயிலில் ஃபில்ட்டர்களை உருவாக்குவது எப்படி?

By Dinesh TG  |  First Published Jan 2, 2023, 4:42 PM IST

ஜிமெயிலில் தேதி, அனுப்புநர், பெறுநர், மெயில் வகை என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஃபில்ட்டர்களை உருவாக்குவது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.


ஜிமெயிலில் உள்ள ஃபில்ட்டர்கள் ஸ்பேம் மின்னஞ்சல்களைத் தவிர்க்கவும், முக்கியமான தகவல்தொடர்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், செயல்களை தானியக்கமாக்குவதற்கும் உதவியாக இருக்கும். இந்த ஃபில்ட்டர்கள் தேவையில்லாத, குறிப்பாக இன்பாக்ஸில் இருக்கும் மின்னஞ்சல்களை காப்பகப்படுத்தவோ அல்லது நீக்கவோ பயனர்களுக்கு உதவும்.

ஜிமெயிலில் ஃபில்ட்டர்களை பயன்படுத்துவதற்கான வழிகள்:

Latest Videos

undefined

படி 1. ஜிமெயில் இன்பாக்ஸின் வலது மூலையில் உள்ள கியர் (செட்டிங்கஸ்) ஐகானைக் கிளிக் செய்யவும்.
படி 2. இப்போது தோன்றும் மெனுவிலிருந்து செட்டிங்கஸ்களைத் தேர்ந்தெடுக்கவும்.
படி3. செட்டிங்கஸ் பக்கத்தில் உள்ள ஃபில்டர்கள் மற்றும் முடக்கப்பட்ட முகவரிகள் மெனுவை கிளிக் செய்யவும்.
படி4. மேலும், புதிய ஃபில்டர் உருவாக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
படி 5. From இடத்தில், அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி அல்லது டொமைனை உள்ளிடவும், அதன் மின்னஞ்சல்களை ஃபில்டர் செய்ய வேண்டும்.
படி 6. தேடல் பொத்தானைக் கொண்டு ஃபில்டர்கள் உருவாக்கு கிளிக் செய்யவும்.

அடுத்த திரையில் ஃபில்டர் செய்ய வேண்டிய செயல்களைத் தேர்ந்தெடுக்கவும். அனுப்புநரிடமிருந்து வரும் அனைத்து மெசேஜ்களையும் தானாக படித்ததாக, நீக்கப்பட்டதாக அல்லது குறிப்பிட்ட லேபிளின் கீழ் செல்லுமாறு பயனர்கள் தேர்ந்தெடுக்கலாம். 

பயனர்கள் ஃபில்டர் பயன்படுத்த விரும்பினால், தங்கள் விருப்பதற்திற்கு ஏற்ப கண்டிஷன்களை கொடத்து அனைத்து மெயில்களுக்கும் பொருத்தமான மெசேஜ் வார்த்தைகளை எண்டர் செய்து, ஃபில்டர்களை பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும். விரும்பிய ஃபில்ட்டரைச் சேமிக்க, ஃபில்ட்டரை உருவாக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும். ஃபில்ட்டரை திருத்தவோ அல்லது நீக்கவோ செய்வதற்கு, மீண்டும் அதே பகுதிக்கு செல்ல வேண்டும்.
 

click me!