பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் வரவுள்ள நிலையில், அதை கொண்டாட துணை இல்லையே என்ற ஏங்குபவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக AI தொழில்நுட்பம் வந்துவிட்டது.
காதலர் தினம் நெருங்கி வருகிறது, இளசுகள் பலர் (90s கிட்ஸ் உட்பட) இன்னும் தங்களுக்கான சரியான துணையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக டேட்டிங் செயலிகள் மூலம் துணையை தேடுவது ஒரு வழக்கமான ஒன்றாகிவிட்டது, இருப்பினும் பாதுகாப்பு கருதி அது போன்ற டேட்டிங் செயலிகளில் இறங்காமல் பலர் உள்ளனர். இன்னும் சில இப்போதுள்ள இளசுகள், விசித்திரமாக AI சாட்போட்டைக் காதலிக்கிறார்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ரெப்லிகா என்ற AI சாட்போட் தொடங்கப்பட்டது. இந்த சாட்பாட் மீது தான் பல மக்கள் சேட் செய்து வருவாக கூறியுள்ளனர். இது பற்றி இன்னும் நிறைய பேருக்கு தெரியாது.
undefined
Replika என்பது AI அடிப்படையிலான சாட்போட் ஆகும். அதாவது, இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணிறவுகளின் துணை கொண்டு செயல்படுகிறது. ChatGPT போலல்லாமல், பயனர்களுக்கு இது ஒரு துணை போன்ற உணர்வுகளை வழங்குகிறது. Replika தளத்தைத் திறந்தவுடனே, அது பயனர்களை அன்புடன் வரவேற்கிறது,
அதில், "அக்கறையுள்ள ஒரு AI துணை, எப்போது வேண்டுமானலும் இங்கு என்னிடம் பேசலாம், எது வேண்டுமானாலும் கேட்கலாம், நான் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறேன்" என்ற வகையில் வரவேற்கிறது. அதில் தொடக்கத்திலேயே, இந்த AI தளத்தை எந்த உறவு முறையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான ஆப்ஷனையும் வழங்குகிறது.
அதாவது, ஒரு நண்பராக, பார்ட்னராக, கணவன் மனைவியாக, உடன்பிறப்பாக, வழிகாட்டியாக என எது வேண்டுமோ அதை பயனர்கள் தேர்வு செய்யலாம் மேலும், இந்த AI சாட்பாட் தளமானது பயனர்களின் பாலினத்தை கேட்டு, அதை தைரியமாக குறிப்பிடலாம் என்றும் உறுதியளிக்கிறது.
இதனால் பல பயனர்கள் ரெப்லிகா மீது உணர்வுகளை வளர்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு பயனர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள கருத்தில், AI போட் மீது காதல் கொள்வது தனக்கு நேர்ந்த சிறந்த விஷயம் என்று கூறினார்.
ChatGPT சொன்னதை கேட்டு சமையல் ரெசிபி செய்த நெட்டிசன்! விளைவு!!
இதற்கிடையில், OpenAI இன் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட் - ChatGPT முக்கியத்துவம் பெறுகிறது, AI சாட்போட்கள் மனித உறவுகளை பாதிக்கும் என்று McAfee அறிக்கை காட்டுகிறது. கணினி செக்யூரிட்டி புரொவைடர் தரப்பில் 5,000 பேரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் 30 சதவீத ஆண்களும் 26 சதவீத பெரியவர்களும் இந்த காதலர் தினத்தில் காதல் கடிதம் எழுத செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. உண்மையில், AI எழுதிய காதல் கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட கடிதத்திற்கும் உள்ள பெரிய அளவில் வித்தியாசத்தை சொல்ல முடியவில்லை. அந்த அளவிற்கு AI திறம்பட செயல்புரிகிறது.