பறக்கும் கார்களுக்கான முதல் விமான நிலையம் திறப்பு... எங்கு தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published May 25, 2022, 4:05 PM IST

பறக்கும் கார் மாடல்களுக்கான விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என்ற நிலையை எட்டி இருக்கிறது. 


பறக்கும் கார் ம்ாடல்கள் நமக்கு இன்று வரை கனவு வாகனமாகவே இருந்து வருகிறது. விரைவில் பறக்கும் கார்கள் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பறக்கும் கார்களை கொண்டு போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவில் பயணிக்க செய்கிறது. இந்த வரிசையில் தற்போது பறக்கும் கார் மாடல்களுக்கு என உலகின் முதல் விமான நிலையம் லண்டனில் திறக்கப்பட்டு உள்ளது. 

லண்டனை சேர்ந்த அர்பன் ஏர் போர்ட் லிமிடெட் நிறுவனம் இந்த விமான நிலையத்தை பறக்கும் கார்மாடல்களுக்காக திறந்து வைத்துள்ளது. இந்த விமான நிலையம் ஏர் ஒன் என அழைக்கப்படுகிறது. விமான நிலையத்தின் ஒட்டு மொத்த பணிகள் அடுத்த 15 மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

விமான நிலையம்:

பறக்கும் கார் மாடல்களுக்கான முதல் விமான நிலையம், லண்டனில் இருந்து சரியாக 155 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த விமான நிலையம் அர்பன் போர்ட் லிமிடெட் மற்றும் கவெண்ட்ரி சிட்டி கவுன்சில் இணைந்து உருவாக்கி இருக்கின்றன. விமான நிலையம், எப்போது வேண்டுமானாலும் பயன்பாட்டுக்கு வரும் என்ற நிலையை எட்டி இருக்கிறது. ஆனால், பொது மக்கள் பயன்பாட்டுக்கான பறக்கும் கார் மாடல்கள் இன்னும் தயாராகவில்லை. 

ஏர் ஒன் விமான நிலையத்தில் இருந்து காற்று மாசு ஏற்படுத்தாத பறக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏர் டாக்சிக்கள் மற்றும் டிரோன்கள் டேக் ஆஃப் செய்து, தரையிறங்க முடியும். பறக்கும் வாகனங்களை வரவேற்க பல்வேறு நிறுவனங்கள், பொது மக்கள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், இவை பொது மக்கள் பயன்பாட்டுக்கான அனுமதியை பெற பல்வேறு தடைகளை கடக்க வேண்டிய நிலையில் உள்ளன. 

click me!